நடிகை சீதா நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த பிறகு சீரியல் நடிகை சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல்கள் இணைய பக்கங்களில் வைரல் ஆகி கிடக்கின்றன.
அவ்வளவு ஏன்..? கூகுளில் சீதாவின் கணவர் யார் என்று கேட்டால் பார்த்திபன், சதீஷ்ஸ் என்று இரண்டு பேரை காட்டுகிறது. கிட்டத்தட்ட இது உண்மைதான் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு இருந்த நிலையில் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
புதிய பாதை என்ற படத்தில் நடிக்க தொடங்கிய பிறகு அந்த படத்தின் பாதியிலேயே சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் இந்த காதலுக்கு நடிகை சீதாவின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனை கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா.
பிஸியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிக் கொண்டார். இதற்கு காரணம் நடிகர் பார்த்திபன் தான் என்று கூறப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றியம் நடிகை சீதாவே அதனை பதிவு செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நான் செய்த மிகப்பெரிய தவறு, படங்களில் நடிக்காமல் விட்டதுதான். ஒரு வேலை தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் என்னுடைய பொருளாதார நிலைமையை நானே சமாளித்துக் கொண்டிருந்திருப்பேன்.
எனக்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டு இருக்காது என பேசி இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடந்தது.
அந்த நேரத்தில் சீரியல் நடிகர் சதீஷ் என்பவரிடம் காதல் வயப்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்தார் நடிகை சீதா என்று கூறப்பட்டது. அதன் பிறகு அவருடைய ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சில வருடங்களிலேயே அவரையும் விவாகரத்தும் செய்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
நடிகை சீதாவை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நடிகர் சதீஷ் விவாகரத்து செய்துவிட்டு சீதாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில் சீரியல் நடிகர் சதீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், பார்த்திபனை பிரிந்த பிறகு சீதாவை நான் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என்றும் அவருடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக் கொண்டேன் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் நாங்கள் ஆரம்பத்திலேயே ஒன்றாக நடித்திருக்கிறோம். இப்போது வரைக்கும் குடும்ப நண்பர்களாக இருக்கிறோம்.
எங்களுடைய வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் சீதா அதில் என்னுடைய தோழியாக கலந்து கொண்டு சிறப்பிப்பார். அதுபோல நானும் எப்போதாவது நேரம் கிடைக்கும் போது சீதாவுடன் பேசுவேன் அவ்வளவுதான்.
இவ்வளவு தான் எனக்கும் சீதாவுக்கும் உள்ள தொடர்பு. ஆனால், எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் விவாகரத்து ஆனதாகவும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.