தனது அப்பாவை முறைத்து பார்க்கும் இந்த சிறுவன் தற்போது பிரபல காமெடி நடிகர்.. யாருன்னு தெரியுமா..?

தமிழ் திரைப்படங்களில் தற்போது அசத்தி வரும் காமெடி நடிகரான இவர் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.

இதையும் படிங்க: அட.. விஜய், அஜித்திற்கு வில்லனாக நடித்த இவர் இந்த முன்னணி நடிகரின் மகனா..?

இந்த புகைப்படத்தில் தனது அப்பாவை முறைத்து பார்த்த நிலையில் எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து அட.. அந்த பையன் தான் இந்த காமெடி நடிகரா? என ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அப்பாவை முறைத்துப் பார்த்த சிறுவன் நடிகரா?..

எப்போதும் திரைப்படங்களில் காமெடி காட்சிகள் இடம் பிடித்து இருப்பதன் மூலம் படம் போர் அடிக்காமல் நகரும். அந்த வகையில் சிறு வயது முதல் கொண்டே தான் ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற கனவில் தன் நண்பன் கையைப் பிடித்து வளர்ந்த வந்த நடிகர் யார் என உங்களுக்கு தெரியுமா?

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானத்தை அடுத்து இந்த நடிகர் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார். இப்போது அந்த நடிகர் யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?.

இவரது காமெடி ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் ரசிக்கக்கூடிய வகையில் இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் பெருத்த ஆதரவை தந்திருக்கிறார்கள். மேலும் தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

யார் அந்த காமெடி நடிகர்..

தற்போது இந்த நடிகர் சிறு வயதில் தனது அப்பா அம்மாவின் நடுவில் நின்று கொண்டு இருக்கும் போட்டோவில் அப்பாவை முறைத்து பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறார். இதனை அடுத்து தற்போது நடிகராக மாறி இருக்கும் அந்த நடிகர் மீண்டும் தனது அப்பா அம்மாவின் நடுவில் நின்று கொண்டு அப்பாவை முறைப்பது போல வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

காமெடி நடிகர் சதீஷ்..

அந்த காமெடி நடிகர் யாருமில்லை சதீஷ் முத்துக்கிருஷ்ணன் தான். இவர் எதிர்நீச்சல் திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயனோடு இணைந்து ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதனை அடுத்து இவர் 2014-ஆம் ஆண்டு கத்தி 2015-இல் தங்க மகன் 2016 -இல் ரெமோ போன்ற படங்களில் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருதை தமிழ் படம் 2-காக பெற்றவர்.

மேலும் காமெடி நடிகர் சதீஷ் கிரேசி மோகனுடன் எட்டு ஆண்டுகள் நாடக குழுவில் இணைந்து பணியாற்றியதை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து மான் கராத்தே திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு மேலும் பல தமிழ் படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த துடிக்கும் கரங்கள் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அத்தோடு கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற திரைப்படம் இவரது பெயர் சொல்லும் படி இவரது நடிப்பை சிறப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக்கியது.

இதையும் படிங்க: Breaking : நடிகர் அஜித்தின் உடல் நிலை குறித்து வெளியான பரபரபப்பு தகவல்..! – சோகத்தில் ரசிகர்கள்..!

அத்துடன் இவரது அன்னை புகைப்படம் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அட சின்ன வயதில் அப்பாவை முறைத்துப் பார்த்த இந்த குழந்தைதான் சதீஷா? என்ற பிரம்மிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version