அட.. காமெடி நடிகர் சதீஷ்-ன் மனைவியா இது..? – தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகர் சதீஷ் : விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மெரினா திரைப்படத்தை பாண்டியராஜன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து காமெடி டிராக்கில் கலக்கியவர் தான் அறிமுக நாயகனான சதீஷ்.

இதன் பிறகு இவரது நகைச்சுவை திறனை உணர்ந்து கொண்ட திரையுலகம் அடுக்கடுக்கான பட வாய்ப்புகளை இவருக்கு அள்ளித் தந்தது. அந்தப் படங்களிலும் இவர் தரமான காமெடி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பிரபலமான நடிகர்களின் வருகையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகர்களின் வரிசையில் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்திருக்கக்கூடிய இவர் மதராசபட்டினம், வை ராஜா வை, மான்கராத்தே, வேலாயுதம், தங்க மகன், அண்ணாத்தே, ரெமோ, ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வடிவேலு நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இவர் கலக்கலாக நடித்து ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஹாஸ்டல் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் நடிகர் சதீஷ்க்கும் சிக்சர் திரைப்படத்தின் இயக்குனரான சாச்சியின் தங்கை சிந்து வைக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தைக்கு அப்பா என்ற அந்தஸ்தில் இருக்கக்கூடிய சதீஷ் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு அழகான ஜோடி மனைவியாக அமைந்து இருக்கிறார் என்ற கமெண்டை பதிவு செய்து இருப்பதோடு நடிகைகளுக்கு இணையான அழகில் இவர் மனைவி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் பார்க்க படு அழகாக இருப்பதோடு ஜாடிக்கேத்த மூடி என்று கூறும் வகையில் இவரது ஜோடி பொருத்தம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இவரா? சதீஷின் மனைவி என்ற கேள்வியை எழுப்பி விட்டு இருப்பதோடு வியப்பால் புருவங்களை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …