இது தான் ரகுவரன் மரணத்துக்கு காரணம்..! பல நாள் ரகசியத்தை உடைத்த சத்யராஜ்..!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரனின் வில்லத்தனத்திற்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது என்று கூறலாம்.

ஆனால் ஆரம்பத்தில் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது ஹீரோ நடிகராகதான் அறிமுகம் ஆனார். பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் நடிகராக மாறிவிட்டார்.

வில்லனாக நடிக்கும் நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் ரகுவரன். அதனாலேயே தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. 1982ல் ஏழாவது மனிதன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் ரகுவரன்.

பெரிய படங்களில் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு அவருக்கு குறைவாகதான் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் 1986 இல் வந்த மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. 1987 இல் மட்டும் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் ரகுவரன்.

அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையானது அதிகரிக்க துவங்கியது. தமிழ் சினிமாவில் எண்ணில் அடங்கா திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரகுவரன்.

முக்கியமாக ரஜினிகாந்தின் நிறைய திரைப்படங்களில் ரகுவரன் வில்லனாக நடித்திருப்பதை பார்க்கலாம். அருணாச்சலம், பாட்ஷா, முத்து என்று ரஜினிகாந்த் நடித்து தமிழில் பெரும் வெற்றி பெற்ற நிறைய திரைப்படங்களில் ரகுவரன் வில்லனாக நடித்திருப்பார்.

சத்யராஜின் அனுபவங்கள்:

கதாநாயகனாக நடித்த காலகட்டத்திலேயே ரகுவரனின் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இது குறித்து நடிகர் சத்யராஜ் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது, ”நடிகர் ரகுவரன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வில்லனாக மாறியவர். நான் அதற்கு நேர்மாறாக வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினேன்.

நான் படிக்கும் கல்லூரியில் எனக்கு மூன்று ஆண்டுகள் ஜூனியர் தான் நடிகர் ரகுவரன். ஆனால் கல்லூரியில் படித்த காலகட்டங்களில் எனக்கு ரகுவரனை அவ்வளவாக தெரியாது. ஆனால் நாங்கள் படிக்கும் கல்லூரிக்கு எதிரில்தான் ரகுவரனின் அப்பா ஒரு உணவகம் நடத்தி வந்தார்.

அந்த உணவகத்திற்கு எல்லாம் நான் அடிக்கடி சென்று இருக்கிறேன். மிஸ்டர் பாரத் திரைப்படத்திற்கு பிறகு ரகுவரனோடு நிறைய திரைப்படங்களில் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு பிறகு நான் ரகுவரன் நாசர் எல்லாம் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம். நிறைய படப்பிடிப்புகளுக்கு மாறி மாறி செல்லும் காரணத்தினால் உடம்பை ஒழுங்காக பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார் ரகுவரன். அதுதான் அவரது இறப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறுகிறார் நடிகர் சத்யராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version