“கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள…” மனைவி அதிதி ராவ் மீது சித்தார்த் கூறிய புகார்..!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்து வைத்த நடிகர் சித்தார்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் நடிகை அதிதி ராவ் ஹைதரியை துரத்தி துரத்தி காதலித்து வந்த விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இதனை அடுத்து இவர்களது திருமணம் செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்து முடிந்தது.

அட.. புதுசா கல்யாணமான ..

இவர்களது திருமணம் ஆனது தெலுங்கானாவில் இருக்கும் வன பட்டி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ரங்கநாயக சுவாமி கோயிலில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது.

இதனை அடுத்து திரைப் பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் திருமணத்திற்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு வோக் பத்திரிகை ஒன்றுக்கு சித்தார்த் மற்றும் அதிதி பேட்டி ஒன்றினை கொடுத்திருந்தார்கள்.

இந்தப் பேட்டியின் போது “சொல்லுங்க உண்மை” என்ற அமர்வில் சில ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டார்கள். இந்த தகவலின் மூலம் இவர்களது நட்பு எந்த அளவு வலுவாக உள்ளது என்பதை பேட்டையில் இருவருமே வெளிப்படுத்தி இருந்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டியது.

மேலும் அதில் சித்தார்த் சொன்ன ரகசியம் என்னவென்றால் அதிதி ராவ் காலையில் முதலில் என்ன செய்வார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எழுந்த உடனே என்னை எழுப்புவது தான் அவளின் வேலை இந்த விஷயம் எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று ஓபனாக போட்டு உடைத்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அப்படி என்னுடைய சம்மதம் இல்லாமல் விருப்பம் இல்லாமல் என்னை எழுப்பி விடும்போது அந்த நாள் அழுக உடைய நாளாக ஆரம்பிக்கும் என்று சித்தார்த் கூறியதை அடுத்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

அதிதி ராவ் மீது சித்தார்த் சொன்ன கம்ப்ளைன்ட்..

அதுமட்டுமல்லாமல் சித்தார்த்தைக்கு வேட்டி மற்றும் கேஷ்வல் உடை மிகவும் பிடிக்கும் என்று தன் பங்குக்கு அதிதி கூறியது அரங்கை அதிர வைத்ததோடு மட்டுமல்லாமல் திருமண தன்று பனாரஸ் சேலையை உடுத்தி அனைவரது கண்களையும் தன் பக்கம் திரும்பிய விஷயத்தையும் பலரும் நினைவு கூர்ந்தார்கள்.

இவர்களின் திருமண உடையை வடிவமைத்தவர் சப்யசாச்சி முகர்ஜி என்பவர்தான். இந்நிகழ்வில் இவரது கணவர் சித்தார்த் கையால் நெய்யப்பட்ட பனாரஸ் வேட்டி பட்டு புர்தாவை அணிந்திருந்தார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திருமணம் ஆக சமயத்தில் காலையில் தன்னை எழுப்புவது பிடிக்காது என்று சொன்ன சித்தார்த் இப்படி உண்மையை ஓப்பனாக சொல்லி விட்டாரே என்று சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version