நடிகர் சூரி ஹோட்டலில் என்ன நடந்தது..! பத்தி எரியுது மதுரை..! திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் அதே சமயம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சினிமாவின் மிகவும் கஷ்டப்பட்டு தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சூரி.

பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு இப்போது வரவேற்புகள் அதிகரிக்கத் துவங்கி இருக்கின்றன. ஏனெனில் விடுதலை திரைப்படத்தில் துவங்கி சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன.

சூரி ஹோட்டலில் என்ன நடந்தது

அதனால் சூரி நடிக்கும் படத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் சினிமாவில் வரும் வருவாயை வைத்து ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார் சூரி. மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சூரிக்கு சொந்தமான கேண்டின் ஒன்று நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 200 நாட்களாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு அறக்கட்டளையின் சார்பாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் உணவுகள் தினசரி மதியம் வழங்கப்பட்டு வந்தது.

அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் இந்த உணவுகளை வாங்கி பயனடைந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்த மருத்துவர் கொலை வழக்கு காரணமாக இனிமேல் மருத்துவமனைக்குள் வெளிநபர்களை அனுமதிக்கும் பொழுது சோதனைகளுக்குப் பிறகுதான் அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

பத்தி எரியுது மதுரை

அதனை தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையிலும் வெளி ஆட்கள் அவ்வளவாக உள்ளே வரக்கூடாது என்று கூறப்பட்டது. எனவே அறக்கட்டளை உணவு வழங்குவதாக இருந்தால் மருத்துவமனைக்கு வெளியில் நின்று தான் வழங்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.

எனவே சாலையிலேயே நின்று உணவுகள் வழங்கப்பட்டன ஆனால் அதை வாங்குவதில் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்து இவ்வளவு தூரம் வெளியில் வந்து தங்களுக்கான உணவை வாங்குவது சிரமமாக இருப்பதாக நோயாளிகள் கூற துவங்கினர் எனவே ஏதாவது ஒரு நிழலான ஒரு இடத்தை பார்த்து அங்கிருந்தாவது உணவை வழங்கினால் தேவலாம் என்று கூறி வருகின்றனர்.

திடுக்கிட வைக்கும் தகவல்கள்

இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க சூரியின் கேண்டின் தொடர்பான பிரச்சனை இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த இலவச உணவை வாங்குவதற்கு கடினமாக இருக்கிறது என்று சிலர் சூரி நடத்தும் கேண்டினில் உணவுகளை வாங்க செல்கின்றனர்.

ஆனால் காசு கொடுத்தாலும் கூட அந்த கேண்டினில் சீக்கிரத்தில் உணவுகள் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. உணவு வழங்குவதற்கு மிகவும் தாமதமாவதாக அங்கு உணவு வாங்குபவர்கள் கூறுகின்றனர். இலவச உணவுகள் கொடுக்கும் இடத்தில் தாமதம் ஆகிறது என்றுதான் சூரியின் கேண்டினுக்கு வாங்க வருகிறோம் ஆனால் இங்கேயும் அதே தாமதம் ஆகிறது என்று அவர்கள் கூறியிருக்கும் நிலையில் தற்சமயம் இது சர்ச்சையாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version