எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 10 வருஷத்துல புஷ்பா வில்லன் இப்படி மாற காரணம் தெரியுமா..?

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுனில். பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வந்த இவர் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பிரபலமாக அனைவராலும் அறியப்பட்டு வருகிறார்.

2000 ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார் சுனில். நூவே காவாலி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். ராம்சரண் நடித்த மாவீரன் திரைப்படத்தில் கூட அவர் காமெடி கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

வெகு காலங்களாக தெலுங்கு சினிமாவில் காமெடியனாக நடித்து வந்த சுனிலுக்கு அதற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல சுனிலுக்கும் கிடைத்தது.

தமிழில் எண்ட்ரி:

எப்படி தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காமெடி நடிகராக இருந்து பிறகு சமீபத்தில் தமிழில் சில திரைப்படங்களில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனில். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்பொழுதுதான் அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரம் எல்லாம் கிடைக்க  துவங்கி இருக்கின்றன.

சுனில் 10 வருடங்களுக்கு முன்பு இப்போது இருப்பது பல உடல் பருமனாக இருக்கவில்லை. உடல் எடையை குறைத்து நன்கு உடலை செதுக்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த வீடியோக்களை எல்லாம் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

பழைய வீடியோ:

அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியோ இவர் இவ்வளவு ஃபிட்டாக உடலை வைத்திருந்தார் என்று அனைவரும் ஆச்சரியமாக அந்த வீடியோக்களை பார்த்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் அவர் சினிமாவுக்கு வரும்போது கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார் என்று கூறப்படுகிறது.

அதனால் உடல் உடலை நன்கு திடப்படுத்தி வைத்திருக்கின்றார் காமெடி கதாபாத்திரமாக நடிக்க துவங்கிய பிறகு அவர் உடல் எடையில் அவ்வளவாக கவனம் செலுத்தாத காரணத்தினால் உடல் எடை அதிகரித்து இருக்கிறது .

அதனால்தான் இப்பொழுது ஜெயிலர், மாவீரன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அவரும் அதிக உடல் எடையுடன் காணப்படுகிறார். இந்த நிலையில் இந்த பழைய வீடியோ தற்சமயம் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் சுனில் நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் தற்சமயம் சங்கர் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version