சூரியாவை உயரமாக காட்ட இதை தான் பண்ணோம்.. இயக்குனர் கௌதம் மேனன் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூரியா இயக்குனர் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் என்ற படத்தில் 1997-ஆம் ஆண்டு நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

 

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சியை தொகுப்பாளராகவும் விளங்கியவர் தனது முதல் படத்தை அடுத்து நந்தா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த இவர் பிதாமகன், பேரழகன், வாணரம் ஆயிரம், ஏழாம் அறிவு போன்ற பல வெற்றி படங்களை தந்திருக்கிறார்.

நடிகர் சூரியா..

ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் சூரியா சரியான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், நாள் செல்ல செல்ல தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், விஜய் விருதுகளை பெற்றிருக்கக் கூடிய இவர் தற்போது கங்குவா படத்தில் நடித்த வருகிறார்.

சரவணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தன் பெயரை சூரியா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

2003-ஆம் ஆண்டில் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகை ஜோதிகாவிற்கும் காதல் ஏற்பட தனது பெற்றோர்களை கன்வெஸ் செய்து 2006-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்தோடு கோவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவ்,தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த அயன், சிங்கம், மாற்றான் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெகுவான வரவை பெற்று இவருக்கு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல் 2022-இல் உலக நாயகன் நடிப்பில் வெளி வந்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை செய்து அனைவரையும் அசத்தினார்.

சூரியாவை உயரமாக காட்ட இதை பண்ணினோம்..

நடிகர் சூரியா 2012-ஆம் ஆண்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி மிக நல்ல பெயரை பெற்றார்.

அது போலவே 36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும் கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரை போற்று போன்ற படங்களை தயாரித்து தயாரிப்பாளராக திரையுலகில் வலம் வந்து இருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் சூர்யாவை பற்றி கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படித்தான் சூர்யாவை உயரமாகக் காட்டினார்களா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் பதிவால் ரசிகர்கள் ஷாக்..

அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் எக்ஸ் பதிவில் சூரியாவை வைத்து படம் எடுக்கும் போது அவரை எப்படி உயரமாக காட்டினேன் என்பதை பகிர்ந்ததை அடுத்து இந்த பதிவு இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற பதிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

மேலும் இயக்குனர் தனது பெரும்பாலான படங்களில் சூரியாவை உயரமாக காட்ட எடுக்கின்ற ஷாட்டுகள் லோ ஆங்கில் ஷார்ட்டாகத் தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு பின் இருக்கும் எந்த ஒரு பொருளும் சூரியாவை விட உயரமாக தெரியாத படி பார்த்துக் கொண்டு தான் அந்த காட்சியை ஷூட் செய்வதாக கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார்.

தற்போது எக்ஸ்ட்ளத்தில் ப்ளூ சட்டை மாறனால் பகிரந்த இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்த இருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படியெல்லாம் உயரமாக காட்ட வழி உள்ளதா? என்று யோசிக்கவும் வைத்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version