விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

எல்லா காலங்களிலுமே விஜய் டிவியில் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தமிழில் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படியாக 2000 கால கட்டங்களில் அதிக பிரபலமாக இருந்த நிகழ்ச்சியாக லொள்ளு சபா நிகழ்ச்சி இருந்து வந்தது.

வந்த கொ* மிரட்டல்

சினிமாவில் இருக்கும் பல நடிகர்களும் கூட லொள்ளு சபாவிற்கு ரசிகர்களாக இருந்து வந்தனர். அந்த அளவிற்கு புகழ்பெற்ற நிகழ்ச்சியாக லொள்ளு சபா இருந்தது. லொள்ளு சபா நிகழ்ச்சிதான் நடிகர் சந்தானத்திற்கும் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ஆனால் சினிமா துறையினர் மத்தியில் ஓரளவு இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியின் மீது கோபத்தில் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் நடிக்கும் படங்களை கேலி செய்யும் விதமாக அந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதால் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மீது கோபம் இருந்து வந்தது.

சினிமாவே வேண்டாம்

இதனால் அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் நடிப்பவர்களுக்கும் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கும் எச்சரிக்கை கடிதங்களையும் அவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுவாமிநாதன் இந்த அனுபவம் ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நான் லொள்ளு சபாவிற்கு பிறகு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தேன். அந்த சமயத்தில் போக்கிரி படத்தை லொள்ளு சபாவில் கொஞ்சம் நகைச்சுவையாக செய்து காட்ட இருந்தோம்.

ஆடிப்போன காமெடி நடிகர்

அதை செய்த பிறகு விஜய் ரசிகர்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் வர துவங்கின. எனக்கு அதன் மூலமாக கொலை மிரட்டல் எல்லாம் வர துவங்கியது. சினிமா படப்பிடிப்புக்கு போகும் வழியில் என்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்று படப்பிடிப்புக்கு செல்ல பயந்தேன்.

அந்த அளவிற்கு அப்பொழுது கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன ஆனால் எந்த நடிகர்களும் இதுகுறித்து எங்களிடம் பெரிதாக கோபப்பட்டது கிடையாது என்று கூறுகிறார் சுவாமிநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version