பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் அந்த படம் நடித்துள்ள எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்..! உறைந்து போன ரசிகர்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் சமீபத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு தொடராக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வந்தது. எதிர்நீச்சல் சீரியலை பொறுத்தவரை அதிகமான கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரியலாக அது இருந்தது.

மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதில் ஆதி குணசேகரனின் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர் நடித்ததால் பிறகு அந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதில் கதிரவேல் என்னும் கதாபாத்திரத்தில் விபு ராமன் என்னும் நடிகர் நடித்திருந்தார். அவர் அதற்கு முன்பு பெரிதாக சீரியல்களில் நடித்து யாரும் பார்த்ததில்லை. ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

சின்னத்திரையில் வாய்ப்பு:

ஆதி குணசேகரனின் வலது கையாகவும் தம்பியாகவும் அந்த சீரியலில் இவர் நடித்திருந்தார். நெகட்டிவ்வான கதாபாத்திரம்தான் என்றாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக விபு ராமன் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வந்தார்.

இதற்கு முன்பு திரை துறையில் இவர் வாய்ப்புகளை தேடி வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் இறுதி காட்சிகளில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் துணை கதாபாத்திரம்:

அடிமேளம் என்கிற ஒரு திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். வெகு காலங்களாகவே இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை.

ஆனால் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைத்தது எதிர்நீச்சல் சீரியலில்தான் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் நிறைய சீரியல்களில் வாய்ப்புகளை பெற்று இருக்கிறார்.

சீரியல்களை பொருத்தவரை அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாண பரிசு, விதி, திகில் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவருக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் உருவான நிலையில் அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு செய்தி ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்திருக்கிறார் விபு ராமன். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு வெளியான அநாகரிகம் என்கிற ஆபாச படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக இவர் இருப்பது தெரிய வந்தது. இது ரசிகர்களுக்கு அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version