நடிகராகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..! இத்தனை கோடி சம்பளமா..? ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

லோகேஷ் கனகராஜ் ( Lokesh Kanagaraj ) மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பார்க்க வைத்த இயக்குனர் ஆவார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் கைதி என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பிறகு தளபதி விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்திலும் கடைசியாக உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் என்ற திரைப்படத்திலும் பணியாற்றி இருந்தார்.

Lokesh Kanagaraj

இவர் இயக்கிய அனைத்து படங்களும் மெகா ஹிட் திரைப்படங்கள் ஆகும். தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். தற்போது இவர் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தில் 30 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இப்போது இவர் இயக்குனர் அன்பு அறிவு இயக்கத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜிற்கு 10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lokesh Kanagaraj

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது மேலும் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையான சம்பளம் யோகேஷ் கனகராஜிற்கு கொடுக்கப்படுவதால் திரை உலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Lokesh Kanagaraj

இத்தனைக்கும் இந்த படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கூடிய விரைவில் லோகேஷ் கனகராஜ் முழுநேர நடிகராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறபடுகின்றன.

Kajal Aggarwal

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.


நீங்கள் அறிந்திடாத – ADVANCED ROBOTS ANIMAL

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …