விஜய்க்கு நான் யார்..? என்ன தொடர்பு..! ரகசியம் உடைத்த நடிகர் வைபவ்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியதில் இருந்து அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டாகி வருகிறது. ஏனெனில் 2026 தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது ஏனெனில் இந்த திரைப்படங்கள் மட்டுமே அடுத்து தளபதி ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களாக இருக்கும் என்பதால்  அவை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

வரவேற்பை பெறும் கோட்:

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேச்சுகள் இருந்து வந்தன.

ஆனால் இப்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய். இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதையானது மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபுவை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து சில நடிகர்களை நடிக்க வைத்துக் கொண்டிருப்பார். இவர்களை வெங்கட் பிரபு கேங் என்று சினிமாவில் கூறுவது உண்டு.

வெங்கட் பிரபு குழு:

சிம்பு, வைபவ், யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, போன்றவர்கள் இந்த குழுவில் உள்ளனர். அந்த வகையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வைபவ் நடித்து வருகிறார்.

படத்தின் கதையானது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தாலும் படத்தில் பணிப்புரிந்து வரும் சிலர் அது குறித்த ரகசியங்களை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே கங்கை அமரனிடம் இது குறித்து கேட்ட பொழுது அவர் எந்த ஒரு தகவலையும் தராமல் மறுத்துவிட்டார்.

படத்தில் கதாபாத்திரம்:

இதற்கு நடுவே சமீபத்தில் நடிகர் வைபவிடம் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என கேட்கும் பொழுது அதில் விஜய் இரண்டு வித கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அந்த கதாபாத்திரங்களில் இளமை விஜய்க்கு நண்பராக வைபவ் நடித்துள்ளதாகவும் அந்த பேட்டியில் கூடியிருக்கிறார்.

இந்த திரைப்படம் ஜெமினி மேன் என்கிற திரைப்படத்தின் தழுவலாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்த நிலையில் அந்த திரைப்படத்திலும் கதாநாயகன் ஒருவன் இளமை கதாபாத்திரத்திலும் மற்றும் ஒருவன் வயதான கதாபாத்திரத்திலும் இருப்பதாக இருக்கும். கோட் திரைப்படத்திலும் அதே போல இருப்பதால் அதன் தழுவலாக இந்த படம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு பக்கம் பேச்சுகளும் இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam