ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்துவிட்டு விஜய் வாங்கியுள்ள புதிய காரை பாருங்க…!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அரசியல் களம் சினிமா களம் இரண்டுமே சூடு பிடித்து இருக்கிறது. இன்னும் விஜய் தன்னுடைய கட்சிக்கான அதிகாரப்பூர்வமான கொடியை அறிவிக்காத நிலையில் கட்சியின் பெயர் அறிவித்தது முதலே விஜய் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

முக்கியமாக அரசியல் கட்சி துவங்கியது முதலே சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அப்படியாக அதேபோல தொடர்ந்து பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி விழா நடத்தி வருகிறார் விஜய்.

அதேபோல சினிமா தளத்திலும் விஜய் குறித்த ஈடுபாடு அதிகரித்து வருகிறது ஏனெனில் விஜய் இன்னும் இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பார் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் கோட்:

இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தனது இறுதி திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே கண்டிப்பாக பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் தன்னுடைய கடைசி திரைப்படத்தை அரசியல் சார்ந்த திரைப்படமாக நடிக்கவிருக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு முதலமைச்சர் கதாபாத்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தொடர்ந்து கார் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். தொடர்ந்து நிறைய கார்களை வாங்கி அவரது வீட்டில் வைத்து இருக்கிறார்.

புது கார்:

விஜய் இந்த நிலையில் தன்னுடைய கலெக்ஷனில் இருந்து ஒரு சில கார்களை விற்றுவிட்டு தற்சமயம் புது கார் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் விஜய் வாங்கிய rolls-royce காரை விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து அவர் வைத்திருந்த வால்வோ காரையும் விற்பனை செய்துவிட்டாராம். இந்த நிலையில் தற்சமயம் லெக்ஸஸ் என்னும் சொகுசு காரை வாங்கி இருக்கிறார் விஜய். இந்த காரின் ஆரம்பகட்ட விலையே 65 லட்சம் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக 2 கோடியை 80 லட்சம் ரூபாய்க்கு இந்த கார் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த காரின் மீது ஆர்வம் கொண்ட விஜய் இதை வாங்கி இருக்கிறார். ஆனால் இதற்கு முன்பே இந்த காரை லோகேஷ் கனகராஜிக்கு கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பரிசாக வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version