நடிகர் விஜய் விவாகரத்து..? – இளம் நடிகையுடன் தொடர்பு..! – உண்மையில் நடந்தது இது தான்..!

ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்க கூடிய விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ள சூழ்நிலையில் தற்போது இவரது மனைவியுடன் இவர் சுமூகமாக இல்லை விவாகரத்து பெற்று விட்டார்கள் என்று பரவு வரும் வதந்தியால் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்து இருக்கிறார்கள்.

 மேலும் இதன் உண்மை நிலை என்ன என்று தெரியாமல்  இருக்கும்போதே சில வதந்திகள் இந்த நிகழ்வினை உண்மைப்படுத்துவது போல் உள்ள செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

மேலும் அண்மையில் நடந்த ஆடியோ லாஞ்சுக்கு விஜய்யின் மனைவியான சங்கீதா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாபெரும் ஆடியோ லான்ச்சுக்கு அவர் வரவில்லை.

 அது மட்டுமல்லாமல் அட்லி பிரியாவின் சீமந்தத்திற்கும் சங்கீதா வராமல் தனியாக விஜய் மட்டும் வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி அந்த கிசுகிசுக்களை உண்மையாகுவது போல மாற்றி விட்டது.

 இதற்கு காரணம் என்னவென்றால் சங்கீதா மற்றும் மகன் மகள் தற்போது லண்டனில் இருப்பதாகத்தான் வர முடியவில்லை என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் அது தவறானது மழுப்புகிறார்கள் என்றும் தற்போது இருவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 ஆனால் லண்டனில் இருக்கும் தனது மனைவி மகளுடன் வெக்கேஷனை களிக்க விஜய் அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. மேலும்  சென்னையில் உள்ள பணிகளை முடித்துக் கொண்டு மனைவி குழந்தைகளை பார்க்கச் செல்வார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் விஜயின் விக்கிபீடியா பக்கத்தில் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டது போல செய்திகள் பரவி வருகிறது.

 அது மட்டுமல்லாமல் தற்போது விஜய்யுடன் இணைந்திருக்கும் பார்ட்னராக கீர்த்தி சுரேஷின் பெயர் குறிப்பிட்டு இருப்பதோடு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கோவத்தை கிளப்பியுள்ளது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் ஆடியோ லான்ச் விழாவில் விஜய் சொன்னது போல நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதை கண்டு கொள்ளாமல் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வசனத்தை பதிவிட்டு தற்போது தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version