விஜய்யோட நடிக்க முடியாது!.. ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தின நடிகர்களுக்கு திரும்ப வாழ்க்கை கொடுத்த விஜய்!. யார் யார் தெரியுமா?

தற்சமயம் தமிழில் உள்ள நடிகர்களிலேயே டாப் நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய். பெரும்பாலும் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாகவே அமைந்து வருகின்றன. மேலும் நடிகர் விஜய்க்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் தமிழில் இருந்து வருகின்றன.

தொடர்ந்து பல நடிகர்களுடன் போட்டி போட்டு தற்சமயம் இப்படி ஒரு இடத்தை தனக்காக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய். இதற்கு நடுவே இந்த வருட துவக்கத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.

விஜய்யோட நடிக்க முடியாது

மேலும் அடுத்து சினிமாவில் இருந்து விலகப் போவதாகவும் கூறியிருக்கிறார் இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் அந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் அதிக வரவேற்புடன் இருந்து வருகின்றனர் ரசிகர்கள்.

தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவ்வளவு செல்வாக்கான நடிகராக இப்போது இருந்தாலும் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தபோது விஜய் நிறைய எதிர்மறையான விமர்சனங்களைதான் சந்தித்தார்.

விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர்தான் விஜய்யை கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அப்பொழுது விஜய்யை பலரும் எதிர்மறையாக விமர்சித்து வந்தனர். முக்கியமாக பார்ப்பதற்கு இவர் நடிகர் போலவே இல்லை.

உதாசீனப்படுத்தின நடிகர்கள்

நடிகர் ஆவதற்கு இவருக்கு தகுதியே இல்லை என்றும் கூறிவந்தனர். அதே போல முதல் படத்திலேயே மிகவும் சிறப்பாக எல்லாம் விஜய் நடித்து விடவில்லை. அதன் பிறகுதான் தன்னையே அப்டேட் செய்து கொண்டார். அதனால் அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்றும் விமர்சனங்கள் இருந்து வந்தன.

இதனால் அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகர்கள் பலரே விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதற்கு தயாராக இல்லை. ஏனெனில் விஜயுடன் சேர்ந்து நடித்தால் அவரது மார்க்கெட் போகும் என்று நினைத்தனர். இப்படி நேருக்கு நேர் திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

வாழ்க்கை கொடுத்த விஜய்

நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய்க்கு எதிர் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக முதலில் நடிகர் பிரசாந்திடம் சென்று கேட்டனர். அந்த சமயத்தில் நடிகர் பிரசாந்த் வரிசையாக பட வாய்ப்புகள் பெற்று பிரபலமான நடிகராக இருந்தார்.

சொல்லப்போனால் விஜய்யை விடவே அப்பொழுது அவர் பிரபலமாக இருந்தார். அதனால் விஜயுடன் சேர்ந்து நடிப்பது சரியாக இருக்காது என்று கூறிவிட்டார். அதேபோல பிறகு நடிகர் பிரபுதேவாவிடம் இது குறித்து கேட்ட பொழுது பிரபுதேவாவுமே நடிக்க முடியாது என்று கூறினார். அதன் பிறகு தான் அந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அறிமுக நடிகராக களம் இறங்கினார்.

ஆனால் இப்பொழுது பிரபுதேவாவிற்கும் நடிகர் பிரசாந்துக்கும் விஜய் அளவிற்கான மார்க்கெட் இல்லை இருந்தாலும் அவர்களுக்கு தன்னுடைய கோட் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் விஜய்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version