இதுக்காக கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது.. நடிகர் விஜய் காட்டமான உத்தரவு..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், நட்சத்திர அந்தஸ்தையும் பிடித்து இருப்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா – மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்குஜோடியாக நடிகை சினேகா பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்து வருகிறார்.

Goat திரைப்படம்:

இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா இந்த படம் முழுக்க நான் டிராவல் செய்கிறேன் .

குறிப்பாக விஜய்யுடன் இந்த படம் முழுக்க நான் வந்து செல்வேன். மேலும், மகன் விஜய்யுடனும் என்னுடைய காட்சிகள் இருக்கும் எனவே இந்த படம் முழுக்க நீங்கள் உங்களது சினேகாவை பார்த்து ரசிக்கலாம் என கூறியிருந்தார்.

அவர்களுடன் மீனாட்சி சௌந்தரி மகன் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் .

மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் .

ட்ரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்:

முன்னதாக இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

கடைசியாக விஜய் மீனாட்சியின் டூயட் பாடலான ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்திற்காக விஜய் ரசிகர் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் .

இதனிடையே இப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தவாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் திரைப்படம் என்றாலே அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.

பேனர், பாலபிஷேகம், மேளதாளங்கள் இப்படி விஜய்யின் படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள் ரசிகர்கள் .

ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்:

எனவே இந்த திரைப்படத்தையும் கொண்டாட விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படியான சமயத்தில் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

அதாவது GOAT படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர் மற்றும் பேனர்களில் எக்காரணம் கொண்டும் கட்சியின் பெயரோ அல்லது கட்சி பொறுப்பு அல்லது பதவியையே பயன்படுத்த கூடாது.

மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு காட்டமான உத்தரவை பறக்கவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version