சிறைக் கைதிகளுக்கு விஜய் சேதுபதி வழங்கிய பரிசை பாத்தீங்களா..?

ஹீரோவாக, வில்லனாக தமிழ் சினிமாவில் அசத்தி வருபவர் விஜய் சேதுபதி. சமூக சிந்தனைகளும் அவரது பேச்சில் வெளிப்படும். உதவி கேட்டு வருபவர்களுக்கு, தயங்காமல் உதவும் மனம் கொண்டவர்.

மதுரை மத்திய சிறையில், சிறப்பு நூலகத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு, புத்தகங்களை வாசிக்க கொடுத்து, அவர்களது மனங்களில் வாழ்க்கை குறித்த நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது,.

சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் ஆகியோர், இந்த திட்டத்தை முன்னெடுத்து, செயல்படுத்தி வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள், சிறைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு நுாலகத் திட்டத்துக்கு புத்தகங்களை வழங்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, உசிலம்பட்டியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களுடன், மதுரை மத்திய சிறைக்கு நேரில் சென்று சிறைத்துறை அதிகாரிகளை நேரில் சநதித்து., 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

மேலும், முதல் கட்டமாகவே 1000 புத்தகங்கள் தந்துள்ளேன். .உசிலம்பட்டியில்தான் படப்பிடிப்பில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால், மீண்டும் புத்தகங்கள் வாங்கி வந்து தருகிறேன். சிறைக் கைதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் இ;ந்த நல்ல திட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றும்,.போலீஸ் அதிகாரிகளிடம் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …