விற்பனைக்கு வந்த விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..! விலை என்னன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கக்கூடிய இவர் இந்த படத்தை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதில் உறுப்பினர்களை சேர்க்க கூடிய பணிகள் மும்மரமாக ஈடுபட்டு இருக்கிறார்

தளபதி விஜய்..

தளபதி விஜயின் ஆரம்ப நாட்கள் சற்று கடுமையாக இருந்தது. இவர் எதிர்பார்த்த வெற்றியை திரையுலகம் இவருக்கு தராத போதும் தனது கடுமையான முயற்சியின் காரணமாக தற்போது தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்குகிறார்.

இந்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கும் இவர் பற்றி பல்வேறு வகையான கருத்து விமர்சனங்கள் இவர் கட்சியை ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி சாராய விபத்து விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக இவரது பதிலடி பலரையும் ஈர்த்தது.

இந்நிலையில் நடிகர் இவரிடம் பல்வேறு வகையான சொகுசு கார்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது என்ற தகவல் ஆனது பரவலாக இணையம் எங்கும் வியாபித்துள்ளது.

அந்த வகையில் விஜயின் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை என்ன? எதனால் அந்த காரை அவர் விற்பனை செய்ய இருக்கிறார் என்பது குறித்த விவரமான விஷயங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

விற்பனைக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..

இந்தக் காரை பொருத்த வரை விஜய்க்கும் இந்த காருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம். இதற்கு காரணம் இந்த காரை இறக்குமதி செய்த போது அதற்கு உரிய இறக்குமதி வரி, நுழைவு வரி போன்ற விஷயங்கள் எக்கச்சக்கமாய் இருந்தது.

இது மட்டுமல்லாமல் 2012-இல் இந்த புத்தம் புதிய சொகுசு காரை விஜய் வாங்கியதை அடுத்து இதற்காக இறக்குமதி வரி மட்டும் 137% விதித்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் காருக்கு உரிய நுழைவு வரியை செலுத்தவில்லை என்று தனி நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

அது மட்டுமல்லாமல் திரையில் ஹீரோவாக இருக்கும் நீங்கள் நிஜத்தில் ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் என்ற அட்வைஸ் செய்திருந்தார்.மேலும் வரி என்பது ஒவ்வொரு குடிமகனும் கட்டாய செலுத்த வேண்டிய தொகை. அது நன்கொடை அல்ல என்பதை விளக்கமாக பகிர்ந்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தனது சொகுசு காருக்கு வரி கட்ட மறுத்ததை அடுத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி அனைவரையும் யோசிக்க வைத்தார்.

உண்மையிலேயே இந்த கார் பதிவு செய்த விசயத்தில் நடந்த சில விஷயங்களால் தான் வரி கட்டுவதில் குழப்பம் ஏற்பட்டு தளபதி விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்பட்டது இதனை அடுத்து இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் தற்போது செகண்ட் ஹாண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

விலை என்னன்னு தெரிஞ்சா மிரண்டு போவீங்க..

எம்பயர்ஸ் ஆட்டோஸ் எனும் பிரீமியம் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய இந்த கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு அனைவரும் புருவங்களை உயர்த்தி இருக்கிறார்கள். இன்ஸ்டா வலைதளத்தில் விஜயின் இந்த கார் 360 டிகிரிகள் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட செய்தி இணையம் எங்கும் பரவி வருகிறது.

பார்க்க புத்தம் புதிய கார் போல இருக்கும் இந்த காரில் ஒரு சின்ன கீரல் கூட இல்லை. சர்வீஸ் பக்காவாக இருப்பதால் இந்த கார் யார் கைக்குச் செல்லும் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.

இந்த காரை வாங்குபவர்கள் வேறு எந்த விதமான வேலைகளையும் காருக்காக பார்க்க வேண்டாம். அந்த அளவுக்கு அந்த அளவுக்கு கார் பக்கா கண்டிஷனரோடு உள்ளது.

மேலும் இந்த கார் தான் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாள் இயக்குனர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ் என பலரும் இந்தக் காரில் ஏறி விஜயோடு ஜாலியாக ஒரு ரவுண்டு வந்தார்கள்.

அப்படிப்பட்ட காரின் விலை தற்போது 2.6 கோடி ரூபாய் என வந்துள்ளது. மேலும் இது நெக்லஜுபில் பிரைஸ் தான். இந்தக் காரானது கோஸ்ட் சீரியஸ் ஒன்று மாடலையும் 2012-இல் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இந்த கார் அதிகபட்சம் 22,000 கிலோ மீட்டர் மட்டுமே ஓடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam