த.வெ.க வில் இணையும் நடிகர் விமல்..? என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

இந்த வருட துவக்கத்தில் விஜய் அரசியல் கட்சியை துவங்கியது முதலே தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. வெகு காலங்களாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை வெளிப்படுத்தும் வகையில் நிறைய திரைப்படங்களில் விஜய் அரசியல் சார்ந்து பேசியும் வந்தார்.

ஆனால் அது அவருக்கு நிறைய பின் விளைவுகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவாரா? அல்லது ரஜினி மாதிரி சும்மா கூறிவிட்டு சென்று விடுவாரா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் பகிரங்கமாக தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய்.

விஜய் அரசியல் வருகை:

மேலும் 2026 தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியிருக்கிறார் விஜய். இந்த விஷயங்கள் தான் விஜய்யின் அரசியல் வருகையை பரபரப்பாக்கி இருக்கிறது. தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அதனை தொடர்ந்து இன்னும் ஒரு திரைப்படத்தில் நடிப்பார்.

அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நடிகர் விமல் சேர இருக்கிறார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அதற்கு தகுந்தார் போல திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபத்தில் விஜய்யின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையிலான பொருட்களை தமிழக வெற்றிக்கழகம் சார்பாக வழங்கி வந்தனர்.

ஆதரவளிக்கும் விமல்:

இந்த விழாவில் நடிகர் விமலும் கலந்து கொண்டார். நடிகர் விமல் தமிழில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். அவர் நடித்த திரைப்படங்களில் களவாணி மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் பேசப்பட்ட திரைப்படங்களாக இருந்தன.

ஆனால் இப்பொழுது அவ்வளவாக அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்றே கூற வேண்டும். விமல் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்திருந்தார். அதன் காரணமாக தற்சமயம் தமிழக வெற்றி கழகத்தின் இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தார்.

இதனை வைத்து விமல் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்த விமல் கூறும் பொழுது கில்லி திரைப்படத்தில் விஜய் அண்ணாவுடன் சேர்ந்து பணிபுரிந்து இருக்கிறேன்.

அவருடன் கில்லி படத்தில் ஒன்பது மாதங்கள் பணிபுரிந்தேன். அந்த நட்பின் காரணமாகவும் எனக்குத் தெரிந்த நபர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இருப்பதாலும் நான் இந்த விழாவிற்கு வந்தேன். மற்றபடி விஜயின் கட்சியில் சேருவேனா என்பது குறித்து இப்போது நான் கூற முடியாது. அதுக்குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பதில் அளித்து இருக்கிறார் விமல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version