வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!

நடிப்பு என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்ததை நடிக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமையாக இருக்கிறது.

ஆனாலும் பிரபல சினிமா நடிகர்கள் யாரும் இப்படியான கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு நபருக்கு அப்பாவாக அல்லது அண்ணனாக நடிக்க வேண்டுமென்றால் நடிக்க மாட்டார்கள்.

அதே சமயம் மற்றவர்கள் அப்படி நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் துவங்கி பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பிறகு அக்கா கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடிப்பதை பார்க்க முடியும்.

அப்படியாக வயது வித்தியாசம் பார்க்காமல் நடித்த சில படங்களை இப்பொழுது பார்க்கலாம்.

சிவாஜி:

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த படம் சிவாஜி இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார் அவருக்கு அம்மா அப்பா கதாபாத்திரத்தில் நடிகை வடிவுக்கரசியும் நடிகர் மணிவண்ணனும் நடித்திருப்பார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் மூவருக்கும் வயது என்னவென்று கேட்டால் பலரும் அதிர்ச்சியாகி விடுவோம். ரஜினிகாந்திற்கு 73 வயது. வடிவுக்கரசிக்கு 61 வயது. அதாவது ரஜினியை விட 12 வயது வடிவுக்கரசி இளையவர் அதைவிட குறைவான வயது உடையவர் மணிவண்ணன் மணிவண்ணனுக்கு 59 வயது தான் ஆகியிருந்தது.

கே.ஜி.எஃப்:

 அடுத்ததாக பார்க்க போகும் நடிகை மிக மிக முக்கியமானவர் கே ஜி எஃப் திரைப்படத்தில் என்னதான் ராக்கி பாய் கதாநாயகனாக இருந்தாலும் அவரது அம்மா கதாபாத்திரம்தான் இரண்டு பாகங்களிலுமே முக்கியமான கதாபாத்திரம் எனலாம்.

இந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு நடிகர் யஷ்ஷை விட பத்து வயது குறைவு என்று கூறப்படுகிறது. அவருக்கு 29 வயதுதான் ஆகிறது ஆனால் நடிகர் யஷ்ஷிற்கு 38 வயது. ஆனால் கடந்த கால கதையில் மட்டுமே அவர் அந்த படத்தில் அம்மாவாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த:

மூன்றாவதாக உள்ள திரைப்படம்தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் படமாக இருக்கும். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு வயதான மூதாட்டி அவருக்கு பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்த பாட்டிக்கு ரஜினிகாந்த்தை விட மூன்று வயது குறைவு என்று கூறப்படுகிறது. படம் வெளியான சமயத்திலேயே இது பயங்கர பேச்சாக இருந்தது. அப்பொழுது ரஜினிகாந்தின் உண்மையான தங்கைகீர்த்தி சுரேஷ் கிடையாது அந்த பாட்டி தான் என்று கூறி பலரும் அதைக் கேலி செய்தும் வந்தனர்.

இப்படி முரணான அளவில் வயது வித்தியாசத்தில் நிறைய நடிகர்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version