பொது இடங்களில் அவமானப்பட்ட நடிகர்கள்..! – சிவகார்திகேயனால் அசிங்கப்பட்ட அருண் விஜய்..!

சினிமாவோ.. அரசியலோ.. பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இயற்கையாகவே உள்ளன.

அப்படியான கட்டுப்பாடுகளை மீறும் பொழுது அந்தப் பிரபலங்களின் பெயர்கள் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அல்லது தொண்டர்கள் மத்தியில் தலை குனிவு ஏற்படும்.

அந்த வகையில் தவறான தங்களது நடவடிக்கைகளால் தங்களது பெயரை கெடுத்துக் கொண்ட ஐந்து முக்கியமான சினிமா நடிகர்களைப் பற்றி நாம் இங்கே பார்க்கலாம்.

05. நடிகர் ஜெய்

 

நடிகர் விஜய்யின் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக சென்னை 600028 என்ற திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஒரு கட்டத்தில் சரியான கதைகளை தேர்வு செய்யாமல் துக்கடா படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை காலி செய்து கொண்டார் நடிகர் ஜெய்.

இந்நிலையில் சமீபத்தில் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இவரது பெயரை டேமேஜ் ஆக்கியது.

அதனைத் தொடர்ந்து இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் நான் ஈடுபட மாட்டேன் குடித்துவிட்டு வாகனங்களை ஓட மாட்டேன் என்று போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டபிறகு அவரை விடுவித்தனர்.

கார் விபத்து ஏற்படுத்தி இருந்தாலும் உயிர்சேதம் எதுவும் இல்லாததால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என எஸ்கேப் ஆனார் நடிகர் ஜெய்.

ஆனாலும் இந்த விவகாரம் நடிகர் ஜெய்யின் பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் பண்ணியது என்றால் அதனை மறுக்க முடியாது.

04.நடிகர் பிரகாஷ்ராஜ்

 

படங்களில் வில்லன் என்றால் அது பிரகாஷ்ராஜ் தான் என்ற பேச்சு ஒருகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு தெலுங்கு சினிமாவில் நிலவி வந்தது. அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வில்லத்தனம் காட்டியவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கிட்டத்தட்ட தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களும் வில்லனாக நடித்து விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

சினிமாவில் மிகவும் போராடி தன்னுடைய இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் தலைக்கனம் பிடித்ததுபோல் நடந்து கொள்வதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் முக்கியமாக படப்பிடிப்பு தளங்களுக்கு தாமதமாக வருவது என்பது அவருடைய வாடிக்கையான ஒன்று என்றும் புகார்கள் வந்துள்ளன இதனால் இவருக்கு சினிமா வட்டாரத்தில் இவரது இந்த நற்பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகி கொண்டே வருகின்றது.

படப்பிடிப்பு தளத்தை தயார் செய்ய படக்குழு இரவு பகலாக உழைத்தும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகள் தாமதமாக வரும் பொழுது அந்த உழைப்பு அனைத்தும் வீணாவதுடன் தயாரிப்பாளர்களுக்கு பண விரயமும் இயக்குனர்களுக்கு தலை வலியும் ஏற்படுவது ஒரு படத்திற்கு நல்லது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

03.சித்தார்த்

 

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகர் சித்தார்த் இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகம்.

ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் கால் போன போக்கிலே கருத்து கூறுகிறேன் கந்தசாமி என்ற பேரொளியில் ஏடாகூடமான கருத்துக்களால் தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

குறிப்பாக மத்திய அரசை சாடும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஆள் எங்கே சென்றார் என்றே தெரியாமல் போய்விட்டது.

சமூக வலைதளப் பக்கங்களில் போராளியை காணவில்லை என்று சித்தார்த் புகைப்படத்தை போட்டு போஸ்டர் ஒட்டி அவரை தேடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இப்படி இருக்கும் நடிகர் சித்தார்த் சமீபத்தில் சாய்னா நேவால் பற்றி அசிங்கமான, அருவருக்கத்தக்க ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களிலும் விசுவரூபம் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் நடிகர் சித்தார்த். இதனால் இவர் மீது இருந்த நற்பெயர் ஒரே ஒரு இரவில் பஸ்பமாகி போனது.

02. நடிகர் மன்சூர் அலிகான்

 

ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டி வந்த நடிகர் மன்சூர் அலிகான் ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் எடுத்திருந்தார் ஆனால் சமீபகாலமாக பொது இடங்களில் தேவையில்லாத கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்துவது மற்றும் குடித்துவிட்டு தெருநாய் உடன் படுத்து உறங்குவது போன்ற செயல்களை செய்து தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.

மட்டுமில்லாமல் ஊடகங்களில் பேட்டியில் பேசும்பொழுது கேஷுவலாக இருக்கிறேன் பேர்வழி என்று பேட்டியில் பேசிக்கொண்டிருக்கும்போதே தொகுப்பாளரை அடிப்பது மிரட்டுவது மேலும் குசு விடுவது போன்ற வேலைகளை செய்து தன்னுடைய பெயரை கலங்கப்படுத்தி கொண்டார் நடிகர் மன்சூர் அலிகான்.

சமீபத்தில் அரசியலில் இறங்கி அரசியல் வட்டாரத்திலும் கேலி பொருளாக மாறி போனார் நடிகர் மன்சூர் அலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.

01.நடிகர் அருண்விஜய்

 

ஹீரோவாக நடித்ததை காட்டிலும் தற்போது வில்லன் நடிகராக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறார் நடிகர் அருண்விஜய் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தொடர்ந்து.. நடித்தால் போதும், என்று ஒன்றுக்கும் உதவாத கதைகளில் நடித்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இடையில் ஆள் எங்கே சென்றார் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போனார் அதன்பிறகு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது .இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா திரைப்படம் வெளியானபோது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் மாஸ் ஹீரோ வா..? யார் யார் மாஸ் காட்டுவது என்ற விவஸ்தை இல்லாம போயிடுச்சு..! என்று சிவகார்த்திகேயனை சீண்டும் விதமாக தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயனை தான் கூறினார் என்று ரசிகர்கள் அனைவரும் அருண் விஜய் கடுமையாக விளாசினார். இதனால் பதறிப்போன நடிகர் அருண்விஜய் என்னுடைய அக்கவுண்ட் ஹேக் ஆயிடுச்சி.. என்று குப்புற விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நடிகர் அருண்விஜய் மீதான மதிப்பு மரியாதை கூடும் ஒரே நாளில் காற்றில் பறந்தது.

போனஸ். நடிகர் சக்தி வாசுதேவன்

பிரபல இயக்குனர் பி வாசுவின் மகனும் நடிகருமான சக்தி தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற இவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் நடுக்கடலில் கத்தரிப்பது போல தத்தளித்து வந்தார்.

இவர் படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை என்றும் பெரிய இயக்குனரின் மகன் என்பதால் இயக்குனர்களிடம் தெனாவட்டாக பேசுவது படப்பிடிப்புத் தளத்தில் நான் தான் ராஜா என்பது போல உலா வருவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இது என்ன பெரிய டேமேஜ்.. இப்ப பண்றேன் பாருங்க டேமேஜ் என்று பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தேவையில்லாத விவகாரங்களில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தன்னுடைய பெயரை தாறுமாறாக டேமேஜ் செய்து ட்ரிகர் சக்தி என்று பட்டை பெயரையும் பெற்றார்.

இப்படி தாறுமாறாக டேமேஜ் ஆகி I.C.U-வில் கிடந்த தனது பெயரை எத்தனை நாளைக்குத்தான் I.C.U-வில் வைத்திருப்பது ஒரே அடியாக எடுத்து அடக்கம் விடலாம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

சமீபத்தில், குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி அவிழ்ந்த வேட்டியை தூக்கி கட்ட கூட முடியாத அளவுக்கு தலைக்கேறிய போதையில் அலப்பறை செய்த இவரது வீடியோ காட்சிகள் வெளியாகி இவரது பெயரை மண்ணோடு மண்ணாகி புதைத்து விட்டது.

அதன் பிறகு நான் செய்தது தவறு. ரசிகர்கள் என்னை மன்னித்து விடவேண்டும் என்று வீடியோ எல்லாம் வெளியிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்க குடிங்க.. கூத்தடிங்க.. எதுக்கு சார் என்கிட்ட மன்னிப்பு கேட்டு டிஸ்ட்ரப் பண்றீங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. என்று கலாய்த்தனர்.

இதிலும் ஒரு கூத்து என்னவென்றால், இவர் நடிப்பில் உருவான ஏழு நாட்கள் என்ற திரைப்படம் திரைக்கு வந்த பொழுது ஒரு திரையரங்கு கூட இந்த படத்தை திரையிட முன்வரவில்லை.

தர்மபுரியில் மட்டும் ஒரே ஒரு திரையரங்கம் அதுவும் ஒரே ஒரு ஷோ ஓட்ட முடியும் என்று முன்வந்தது அதன்பிறகு இந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் போனது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …