பல்லு போற வயசுல கல்யாணம் பண்ணி ரவுசு பண்ணிய நடிகர்கள்.. அதுலயும் இந்த கூத்தை பாருங்க..!

பல்லு போற வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆன பிரபலமான நட்சத்திர நடிகர்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ஜெமினி கணேசன்:

பழம்பெரும் நடிகரான ஜெமினி கணேசன் அந்த காலத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அக்காலத்தில் கொடிகட்டி பறந்த புகழ்பெற்ற நடிகராக இருந்து வந்தார்.

திரைப்படங்களில் காதல் கதாபாத்திரங்களில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது என்ற வகையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் .

அது மட்டும் இல்லாமல் பல பெண்களுடன் இவர் நெருங்கி பழகி நிறைய பேரை காதலித்திருக்கிறார். பல பேருடன் ரகசிய உறவில் இருந்து இருக்கிறார். மூன்றுக்கும் மேற்பட்ட திருமணத்தை செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட இருக்கு 8 பிள்ளைகளும் இருக்கிறார்கள். 1940 ஆம் ஆண்டில் அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அடுத்து புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

அதை எடுத்து பிரபல நடிகையான சாவித்திரியை 1954 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் பிரிந்து விட்டார்.

தொடர்ந்து பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெண்களுக்கும் துரோகம் செய்து வந்தார் ஜெமினி கணேசன் .

இவருக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி ,ராதா பானு, ரேகா, விஜய சாமுண்டீஸ்வரி ,சதீஷ் கிருஷ்ணா எப்படி பல பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த நடிகர் ஜெமினி கணேசன் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என கூறி விமர்சிக்கப்பட்டு வந்தது நிதர்சனமான உண்மை.

இவர் இப்படி இருக்கையில் தன்னுடைய 79 வயதில் 36 வயதான ஜூலி என்ற பெண்ணை 4வது தாரமாக திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் வேலு பிரபாகரன்:

அடுத்ததாக இயக்குனர் வேணு பிரபாகரன் 60 வயதான வேணு பிரபாகரன் 30 வயதான ஷெர்லிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்:

இந்த லிஸ்டில் அடுத்ததாக இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் சினிமாவில் பல்வேறு வில்லன் கதாபாத்திரங்களில் ஏற்று நடித்த பிரபலமான வில்லனாக வலம் வந்தார்.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு , மலையாளம் , கன்னடம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்கலில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் .

வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

இதனிடையே லலிதா குமாரியுடன் மனம் முறிவு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் .

கணவரை பிரிந்த பிறகும் லலிதா குமாரி பல பேட்டிகளில் தனது கணவர் மிகுந்த மரியாதையோடு பேசுவார் தன் பிள்ளைகளை அவர் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்வார் எனது கணவர் எனக்கு மிகவும் பிடிக்கும் என லலிதா குமாரி பல பேட்டிகள் கூறியிருந்தது இணையத்தில் வைரலானது .

அதை எடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் போனி வர்மா என்ற பெண்ணை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்கள் . முதல் மனைவியை பிரிந்தாலும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தை இரண்டாவது மனைவி என குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி:

அடுத்ததாக இந்த லிஸ்டில் பார்க்கும் நடிகர் பிரபல வில்லன் நடிகர் ஆன ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக பார்க்கப்பட்டு வந்த ஆசிஷ் வித்யார்த்தி விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார் .

இந்த திரைப்படமே அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் தில்,பாபா, ஏழுமலை, பகவதி , தமிழன் ,கில்லி , அழகிய தமிழ் மகன், மலைக்கோட்டை ,சிட்டிசன், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் வில்லன் வேடங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களின் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக இருந்து வந்தார்.

இவர் கடந்த ஆண்டு தன்னுடைய 57 வயதாக இருந்தபோது அசாமை சேர்ந்த பேஷியன் தொழில் முனைவரான ராசோசி பரூவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ராஜேஷ் பருவா எனபவரை திருமணம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யா

அடுத்ததாக பார்க்கப்போகும் நடிகர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருந்தார் .

பல்வேறு நடிகர் நடிகைகளுடன் செய்து கிசுகிசுக்கப்பட்டு வந்த இவர் இவர் கிட்டத்தட்ட 46 வயது வரைக்கும் திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்ததோடு பல்வேறு நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

வனமகன் திரைப்படத்தில் நடித்த போது பாலிவுட் நடிகையான சாயிஷா உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவருக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version