முதல் மனைவியின் சம்மதத்துடன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நடிகர்கள்..

பொதுவாகவே இங்கு கலாச்சார ரீதியாக திருமணம் என்பது முக்கியமான பந்தமாக இருந்து வருகிறது. மக்களை பொருத்தவரை ஒருமுறை திருமணம் செய்து கொண்டால் பிறகு சாகும் வரையில் அவர்களுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் அதிகபட்ச மக்களின் எண்ணமாக இருக்கிறது.

என்னதான் விவாகரத்து மாதிரியான விஷயங்கள் இருந்தாலும் கூட அதிகபட்சம் விவாகரத்து எல்லாம் இல்லாமல் நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்பதுதான் இங்கு மக்களின் குறிகோளாக இருக்கிறது.

ஆனால் பிரபலங்களைப் பொறுத்தவரை அவர்கள் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். பிரபலங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடுவார்கள் என்கிற நிலை இருக்கிறது.

கார்த்திக்:

விவாகரத்து என்பது அவர்களுக்கு சாதாரணமான விஷயமாக இருக்கிறது இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னரும் கூட அவர்களது சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்த பிரபலங்களை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகனாக இருந்த கார்த்திக் அப்போதைய காலகட்டங்களில் ஒரு ப்ளேபாய் போலதான் இருந்து வந்தார் என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு நடிகையின் மீது காதல் கொண்ட கார்த்திக் அவரை திருமணம் செய்து கொண்டார்.

பிறகு அவருடைய சம்மதத்துடன் நடிகையின் தங்கையையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் மச்சினிச்சியை திருமணம் செய்து கொண்ட நடிகர் என்றால் அதே நடிகர் கார்த்திக் மட்டும் தான்.

நடிகர் விஜயகுமார்:

நடிகர் விஜயகுமார் மஞ்சுளாவை திருமணம் செய்ததுதான் பலருக்கும் தெரியும். ஆனால் மஞ்சுளாவிற்கு முன்பு முத்துக்கண்ணு வேளாளர் என்கிற பெண்ணைதான் திருமணம் செய்து இருந்தார் விஜயகுமார். அதற்குப் பிறகுதான் அவருக்கு மஞ்சுளாவின் மீது காதல் ஏற்பட்டது.

முதல் மனைவியுடன் விருப்பத்துடனே மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் மஞ்சுளா இல்லாத இந்த காலகட்டங்களில் திரும்பவும் முதல் மனைவியுடனுடனே வாழ்ந்து வருகிறார் விஜயகுமார்.

அடுத்ததாக நடிகர் ரஞ்சித்: தற்சமயம் அதிக பிரபலமாகி வரும் நடிகர் ரஞ்சித் சூரியவம்சம் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே சில காலங்களிலேயே விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு பிறகு ராகசுதா என்னும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார்.

ஆனால் அவருடனும் இவருக்கு சுமூகமான உறவு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் ப்ரியா ராமனுடனே இணைந்து வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஞ்சித்.

டைகர் பாபு:

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் டைகர் பாபு இவர் அல்போன்சா மேரி என்கிற நடிகையை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிறகு பிரிந்து விட்டனர்.

அதற்கு பிறகு ஜெயமாலா என்கிற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் அவருடனும் இவருக்கு சுமூகமான உறவு ஏற்படவில்லை. அதற்கு பிறகுதான் நடிகை அஞ்சுவை திருமணம் செய்தார். நடிகர் அஞ்சுவுக்கும் இவருக்கும் எக்கச்சக்க வயது வித்தியாசம் என்றாலும் அவரை ஏமாற்றி டைகர் பாபு திருமணம் செய்து கொண்டார் என்று அஞ்சு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version