கணவருடன் சேர்ந்து குழந்தை பெத்துக்கலாமா..? அல்லது.. இப்படி.. விருமாண்டி அபிராமி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை அபிராமி முக்கியமானவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை அபிராமி கேரளாவை பூர்விகமாக கொண்டவர் ஆவார். சினிமாவின் மீது ஈடுபாடு கொண்டவர் சினிமாவில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தார். 1995ஆம் ஆண்டு ஒரு மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 1999 இல் அவருக்கு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் 2001 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அபிராமி. 2001 ஆம் ஆண்டு வெளியான வானவில் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் வாய்ப்பு:

அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பை பெற்ற படமாக இருந்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் என்று பல படங்களில் நடித்திருக்கிறார் அபிராமி.

அபிராமிக்கு பெரும் வெற்றியை கொடுத்த ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விருமாண்டி. அந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் அபிராமி தென் தமிழகத்தின் ஊர் பாஷை வரை சிறப்பாக பேசி அந்த திரைப்படத்தில் அசத்தியிருப்பார்.

செல்ல குழந்தை:

அதனை தொடர்ந்து விருமாண்டி திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அபிராமி பேசியிருந்த விஷயங்கள் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அதில் அவர் பேசும் பொழுது எனது மகள் பெயர் கல்கி. அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் எனது வாழ்க்கை சந்தோஷமாக மாறியது கல்கி சிறுவயதிலிருந்தே மிகவும் துறுத்துறுப்பாக  இருப்பவர். நாம் சாப்பாடு ஊட்டி விட்டால் கூட அதற்கு அனுமதிக்கம்மாட்டார்.

இடது பழக்கம் கொண்டவர் என்று தனது மகள் குறித்து சுவாரசியமான பல விஷயங்களை பேசி இருந்தார் அபிராமி. அதில் அவர் கூறும்பொழுது தாய்மை என்பது ஒரு பெண்ணின் அபிப்பிராயம்தான் பத்து மாதங்கள் குழந்தையை சுமந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது வாடகை தாய் முறை மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமா? என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதுவும் இல்லாமல் சிலர் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறார்கள் அதுவும் அவர்களது தனிப்பட்ட விருப்பம்தான் அதற்கு மற்றவர்கள் கருத்து கூறுவது சரி கிடையாது என்று கூறி இருக்கிறார் அபிராமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version