வயசானாலும் அழகும்.. கவர்ச்சியும் குறையல.. தேக்கு தொடையை முழுசாக காட்டி.. கிக் ஏற்றும் விருமாண்டி ஹீரோயின்..!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அபிராமி கோபி குமார். அபிராமியை பொறுத்தவரை மற்ற நடிகைகளை போல சாதாரணமாக நடிக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த படத்திற்கு தேவையான அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.

பல வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் அதிகமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும்  கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 1995 ஆம் ஆண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

மலையாளத்தில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலேயே நிறைய வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வரை நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் அபிராமி. தமிழில் முதன்முதலாக வானவில் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அபிராமி.

வானவில் திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அபிராமிக்கு அந்த திரைப்படம் நல்ல படமாக அமைந்தது.

இரண்டாவது திரைப்படமாக அவர் நடித்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படமும் அதிக வரவேற்பை பெற்றது. பிறகு அவரது நடிப்பில் 2001 இல் வெளியான சமுத்திரம், சார்லி சாப்ளின் என அனைத்து திரைப்படங்களுமே வரவேற்பை பெரும் திரைப்படங்களாக இருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டுமே ஓரளவு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றன. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. எனவே மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

அடையாளமாக அமைந்த படம்:

2004 ஆம் ஆண்டு அபிராமி நடித்த விருமாண்டி திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. ஏனெனில் மொத்த திரைப்படத்தையும் மாற்றி அமைக்கும் கதாபாத்திரமாக அவரது அன்னலட்சுமி கதாபாத்திரம் இருந்தது.

மேலும் அன்னலட்சுமி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார் அபிராமி. இப்போது கூட அபிராமி என்று கூறினாலே அன்னலட்சுமி கதாபாத்திரம்தான் பலருக்கும் நினைவு வரும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார் அபிராமி.

இன்னமும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் முன்பு இருந்த அளவிற்கு இப்பொழுது அவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைப்பது இல்லை. மகாராஜா திரைப்படத்தில் கூட வில்லனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிராமி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் உடற்பயிற்சி புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த வயதிலும் தனது உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாரே அபிராமி என்று கூறி இது குறித்து ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version