சினிமா நடிகைகள் பலரும் தங்களுடைய பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் நடிகர்களின் மேனேஜர்கள் என தங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது நடிகைகளின் சமீபத்திய பேட்டி மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இன்னும் சில நடிகைகள் என்ன கூறுகிறார்கள் என்றால், எங்களை விட நல்ல நடிப்பு திறமை இருக்கக் கூடிய ஒரு நடிகை எங்களை விட ஒரு நல்ல நடனத் திறமை இருக்கக் கூடிய ஒரு நடிகை பட வாய்ப்பு பெறுகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிறார்கள் என்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
ஏனென்றால் அவர் எங்களை விடவும் நல்ல நடிப்பு திறமை.. நல்ல நடன திறமை உடையவர். அந்த நடிகையை நாங்கள் வணங்குவோம். ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு எவ்வளவு பெரிய நடிகையானாலும் அவர்களை நாங்கள் திரும்பி கூட பார்க்க மாட்டோம்.
ஏனென்றால் அவர்களை விட நாங்கள் சிறப்பாக நடிக்கக் கூடியவர்கள்.. அவர்களை விட சிறப்பாக நடனம் ஆட கூடியவர்கள்.. எங்களால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள முடியாது ஆனால், அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் கிடைக்கிறது. என்றால் அதற்காக நாங்கள் அவர்களை மதிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது என பல நடிகைகளின் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.
அந்த வகையில், முன்னணி நடிகைகள் சிலர் தங்களுடைய மோசமான அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதைப் பற்றி தான் இந்த பதிவு,
நடிகை கௌதமி தன்னுடைய ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடித்த பிரபலமானார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் முடியும் என அவரை அழைத்து இருக்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட பட வாய்ப்பு எனக்கு தேவை கிடையாது என்னுடைய திறமைக்கு வாய்ப்பு இருந்தால் கொடுங்கள்.. மற்றபடி என்னால் இப்படியான விஷயங்கள் யோசித்துக்கூட பார்க்க முடியாது என மறுத்திருக்கிறார் கௌதமி.
இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் தவறி போயிருக்கிறது. மேலும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவில்லை. நடிகைகள் என்றாலும் கூட அவர்கள் மீது சில இயக்குனர்கள் தீராத மோகம் கொண்டு இருப்பார்கள்.
அப்படியா நடிகைகளை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்று 30 நாட்கள் 40 நாட்கள் என அவர்களை ஒரே அறையில் தங்க வைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படமாக்காமல் எந்த அளவுக்கு அவர்களை மனரீதியாக தொந்தரவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்வார்கள். நடிகைகள் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது ஏனென்றால் அந்த நாட்களுக்கு அவர்கள் சம்பளம் வாங்கி இருப்பார்கள்.
கடைசியாகஅவர்களை படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு மோசமான கவர்ச்சியான உடைகளை கொடுத்து அணிய வைத்து மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடிக்க வைத்து படமாக்குவார்கள்.
அதன் பிறகு அந்த விஷயத்தை அந்த நடிகைகளிடம் காட்டி இப்படி கோடிக்கணக்கான பேர் இந்த வீடியோவை பார்க்க போகிறார்கள். இதே உடையில் கேமரா முன் இல்லாமல் என் முன்னால் செய்தால் என்ன தவறு.. என்பது போல பேசி அவர்களை மனரீதியாக பலவீனமாக்கி.. அதன் பிறகு அவர்களை சம்மதிக்க வைக்கும் நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கிறது.
அதனை நான் என்னுடைய சக சினிமா தோழிகள் கூறுவதை கேட்டு இருக்கிறேன் என கூறியிருக்கிறார் பிரபல நடிகை பூர்ணா.
அடுத்ததாக நடிகை வரலட்சுமி இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மூத்த மகள். திரையுலக பின்னணி கொண்ட ஒரு நடிகை. ஆனாலும், சில நடிகர்கள் இவரை படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள் என்று சமீபத்தில் வரலட்சுமி தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டும் இதற்கு உங்களுக்கு சம்மதமா..? என்று கேட்டனர். நானும் படத்திற்காக படத்தின் கதைக்காக தேவைப்பட்டால் கண்டிப்பாக நான் அணிவேன் அதில் எந்த பிரச்சினையும் எனக்கு கிடையாது எனக்கு கூறியுள்ளேன்.. அதே போல் நடித்தும் இருக்கிறேன்.
ஆனால் படத்திலேயே இவ்வளவு கவர்ச்சியாக நடனமாடுகிறீர்களே.. எங்களுடன் தனியாக இருக்கக் கூடாதா..? என்று சில நடிகர்கள் நடிகை வரலட்சுமி இடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள்.
மட்டுமில்லாமல் அவருடைய உடல் அழகை வர்ணிக்கும் விதமான விஷயங்களையும் செய்திருக்கிறார்கள் என்று வரலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இப்படி நாளுக்கு நாள் இந்த பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சமாச்சாரம் குறித்து நடிகைகள் கூறக்கூடிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு என்ன தான் முடிவு..? அல்லது இது தொடர்கதை தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.