அவரு என் புருஷன் இல்ல.. அப்போவே எனக்கு DIVORCE ஆயிடுச்சு..

தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதலே தமிழில் நடிகையாக இருந்து வரும் லட்சுமிக்கும் அவரது கணவர் பாஸ்கர் என்பவருக்கும் பிறந்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்.

தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக வெளியான அடவிலோ அபிமன்யுடு என்கிற திரைப்படம் மூலமாக வெள்ளித்திரைக்குள் அறிமுகமானார் ஐஸ்வர்யா பாஸ்கரன். அதனை தொடர்ந்து அவருக்கு பழ மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்தன.

90களில் எண்ட்ரி:

தமிழில் 1990 இல் வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானாலும் பாக்கியராஜுடன் இணைந்து நடித்த ராசுக்குட்டி திரைப்படம்தான் இவருக்கு தமிழில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து கதாநாயகியாக சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தது. இந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு தன்வீர் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா பாஸ்கரன். அடுத்த வருடமே இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்தது. ஒரு மகள் பிறந்தார்.

விவாகரத்து:

அதனை தொடர்ந்து குழந்தை பிறந்த அடுத்த ஒரு வருடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருமே பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு அவரது முன்னாள் கணவரான தன்வீர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இதற்கு நடுவில் சில காலங்கள் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் அவர் சோப்பு விற்று அந்த காசில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு மீண்டும் அவருக்கு சினிமாத்துறை வாய்ப்புகளை வழங்க தொடங்கியது. இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா பாஸ்கரன் அளித்த பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.

விவாகரத்துக்கு பிறகு வந்த உறவு:

அதில் அவர் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளார். தனது முன்னாள் கணவரான தன்வீர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தனக்கு எந்த வகையிலும் வருத்தம் அளிக்கவில்லை, என்று கூறிய அவர் ”நானும் விவாகரத்திற்கு பிறகு இன்னொரு ஒரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் வெகுநாட்கள் நீடிக்கவில்லை மிக குறுகிய நாட்களிலேயே முடிந்து விட்டது என்று கூறுகிறார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இப்படி விவாகரத்திற்கு பிறகு மற்றொரு நபருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறுவது சரியா என்று இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version