அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே நடிகைகளின் நிறம் பார்த்து தேர்ந்தெடுப்பது என்பது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் அதே சமகாலக்கட்டங்களில் தொடர்ந்து கருப்பாக இருக்கும் நடிகைகளும் சாதித்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்று அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதே சமயம் சினிமாவிற்குள் வரும்பொழுது அதிக தடைகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள். அப்படி தன் வாழ்நாள் முழுக்க அதிக தடைகளை சந்தித்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது பெற்றோரால் தவம் இருந்து பெற்ற ஒரு பிள்ளை என்றுதான் கூற வேண்டும்.

தவமிருந்து பிறந்த பிள்ளை:

ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றோருக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளுமே ஆண் குழந்தையாக இருந்தது. இந்த நிலையில் பல தெய்வங்களை வணங்கி அவர்கள் நான்காவது குழந்தை ஆவது பெண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டினர்.

நான்காவது குழந்தையும் ஆண் குழந்தையாக இருந்துவிடுமோ என அதை கருகலைக்க கூட நினைத்துள்ளனர். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அதனை தொடர்ந்து பிறந்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தது முதலே அவருக்கு நிறைய கஷ்டங்கள்தான் அவரது வாழ்க்கையில் நடந்துள்ளது. அவருக்கு எட்டு வயதாக இருக்கும் பொழுது அவரது தந்தை மரணம் அடைந்து விட்டார்.

அதனை தொடர்ந்து அவரது 12வது வயதில் தன்னுடைய மூத்த அண்ணனையும் இழந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். காதல் தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வாழ்வில் இழப்புகள்:

அதன்பிறகு அவரது இரண்டாவது அண்ணன் கொஞ்சம் வேலைக்கு போக தொடங்கிய பிறகு தான் அவர்களது குடும்பம் கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தது என்று கூறலாம்.  ஆனால் அவரும் பிறகு விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து வேலைக்கு சென்று வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மாநாட மயிலாட என்ற கலைஞர் டிவி நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். அதனை கொண்டு சினிமாவிலும் வாய்ப்பை பெற நினைத்தார்.

actress Aishwarya rajesh hot pics

சினிமாவில் வாய்ப்பு:

ஆனால் அவரது கருப்பு நிறத்தின் காரணமாக தொடர்ந்து சினிமாவில் அவமதிப்பிற்கு உள்ளானார். அப்படியும் கூட சில வருடங்கள் போராடி அட்டகத்தி திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வாய்ப்பை பெற்றார். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என்று வரிசையாக நடித்து பெயர் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷிற்கு காக்கா முட்டை முக்கிய திரைப்படமாக அமைந்தது.

பொதுவாக வளர்ந்து வரும் நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அந்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்ததால் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமாக தேசிய விருதும் பெற்றார். அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை நிறைய பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version