என் உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு.. குப்புன்னு வேர்த்துடுச்சு.. கெட்ட வார்த்தையில் திட்டினேன்.. பிரபல இயக்குனர் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து அதிக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரி படிப்பை முடித்த உடனே சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் சினிமாவிற்கு வருவதற்கு ஆசைப்படுவதே கிடையாது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகளும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாகதான் இருந்துள்ளனர்.

அதிகபட்சம் மாடலிங் துறையின் மூலமாக தான் சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பொருத்தவரை சின்னத்திரை மூலமாக அவர் சினிமாவிற்குள் வந்தார். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அதற்குப் பிறகு அவருக்கு மானாட மயிலாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு அறிமுக இயக்குனர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் இயக்குனர் பா ரஞ்சித் தனது முதல் திரைப்படமான அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி வந்தார். அந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு..

அதனை தொடர்ந்து அவருக்கு ரம்மி பண்ணையாரும் பத்மினியும் போன்ற இரண்டு திரைப்படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இரண்டு திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

அதற்கு பிறகுதான் காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் புதிதாக அறிமுகமாகும் நடிகைகள் யாருமே அம்மா கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க மாட்டார்கள்.

ஏனெனில் அது திரும்ப கதாநாயகியாக நடிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று நினைப்பார்கள். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தார். அது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது.

கெட்ட வார்த்தையில் திட்டினேன்.

சமீபத்தில் பேட்டி ஒன்றிய பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். அதில் கூறும் பொழுது வட சென்னை திரைப்படத்தில் தனுஷை ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்று காட்சி இருக்கும்.

அந்த காட்சி குறித்து என்னிடம் கூறும் பொழுது எனக்கு அதிக அதிர்ச்சியாக இருந்தது. உடல் எல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது எப்படி இவ்வளவு பேருக்கு நடுவில் கெட்ட வார்த்தைகள் பேசுவது என்று யோசித்தேன். ஆனால் இந்த படத்தின் வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்றும் நினைத்தேன் எனவே ஒரு ஒன்றரை நிமிடம் தொடர்ந்து கெட்ட வார்த்தையிலேயே பேசினேன். அதை படம் பிடித்த கேமராமேன் கைதட்டி என்னை பாராட்டினார். முதன் முதலாக கெட்ட வார்த்தைக்காக கைதட்டு வாங்கி பாராட்டு வாங்கியது அதுதான் முதல் தடவை என்று கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version