நீ அந்த பேட்டி குடுத்திருக்க கூடாது.. என்ன மன்னிச்சுடு மா.. Actress Aishwaryaa ஓப்பன் டாக்..

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பிடித்துக்கொண்ட ஐஸ்வர்யா இவர் ஒரு வாரிசு நடிகை. பழம்பெரும் நடிகையான நடிகை லட்சுமியின் மகள் இவரது இயற்பெயர் சாந்தா மீனா என்பதாகும் திரைப்படங்களில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா..

பாரம்பரியமாக திரைப்பட துறையைச் சார்ந்த இவரது குடும்பம் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு உதவிகரமாக இருந்தது என கூறலாம். இவரது தாத்தாவை அடுத்து இவரது அம்மா பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் ஆறு, வேல், அபியும் நானும், தேனி மாவட்டம், உச்சிதனை முகந்தால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவர் தென்றல், பாரிஜாதம், மாமா மாப்பிள்ளை, அழகு போன்ற சீரியலில் நடித்து அசத்தியவர்.

இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா ரொமான்ஸ்.. கிறுகிறுத்து போன ஹீரோ.. வைரல் வீடியோ..

தனது பாட்டி தான் இவரை வளர்த்து பள்ளிக்கு அனுப்பியவர் என்றும் தந்தை செய்யக்கூடிய கடமைகள் அனைத்தையுமே இவர் லட்சுமி செய்திருப்பதாக பெருமைப்பட கூடியிருக்கிறார். மேலும் தன்னுடைய அம்மா நவராத்திரி கொலுவை சீரும் சிறப்புமாக வைப்பார். மிகவும் சுத்தமான பழக்கவழக்கங்களோடு இருப்பார்.

எப்போதுமே ஸ்டிக் ஆக எதையும் பாவம் செய்யக்கூடிய கேரக்டருடன் இருந்தார். எனினும் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தாலும் என்னிடம் வழக்கமான அம்மாக்கள் எப்படி இருப்பார்களோ? அது போலவே என்னிடம் பழகுவார் எனக் கூறியிருக்கிறார்.

அம்மா பற்றிய பேட்டி..

ஒவ்வொரு முறையும் தன் அம்மாவை பற்றி பெருமையாக கூறக்கூடிய இவர் தான் செய்த ஒரு தவறை பற்றி வெளிப்படையாக கூறியதோடு அந்த பேட்டியில் நான் அப்படி செய்திருக்கக் கூடாது. என்னை மன்னித்துவிடு அம்மா என்று ஓப்பனாக பேசிய விஷயம் இணையத்தில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா தன்னுடைய அம்மா லட்சுமி குறித்து சமீபத்திய பேட்டியில் மிகச் சிறப்பான முறையில் பேசி இருக்கிறார். மேலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஒரு பேட்டியின் போது என்னுடைய அம்மாவை கோபப்படும் விதமாக சில விஷயங்களை நான் பேசி விட்டேன். அதன் பின்பு தான் அது பைத்தியக்காரத்தனம் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என தெரிந்ததாக கூறினார்.

மேலும் இதனால் ஐஸ்வர்யாவிற்கும் அவருடைய அம்மா லட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் என்னிடம் நீ அந்த பேட்டியை கொடுத்திருக்கக் கூடாது என அம்மா திட்டியதாகவும் கூறினார். அப்போதே நான் அவரிடம் என்னை மன்னிச்சிடம்மா என்று கேட்டேன் என்று கூறி இவர் தற்போதும் அவரும் அவரது ஆன்மாவும் மிகவும் அன்னியோன்யமாக தான் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கணவர் செய்த துரோகம்.. போலீஸ் அப்பா.. தீராத நோய்.. கடைசி சத்தியம்.. பரிதாபமாக இறந்த மஞ்சுளாவின் ரகசியம்..!

ஆனால் மீடியாக்களில் எங்களை பற்றி தவறான தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. அதைப் பற்றி நான் என்றுமே கவலைப்படுவது கிடையாது. பொதுவாகவே சோசியல் மீடியாக்களில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன் என கூறிய ஐஸ்வர்யாவின் இந்த பேட்டி இணையத்தில் தற்போது வைரலாக மாறி வருகிறது.

இந்த பேட்டியை நீங்கள் காண விரும்பினால் இந்த வீடியோவை இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=NSHTi8vfWxU சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version