வேறு நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் போது.. என் கணவர்.. நடிகை ஆல்யா மானசா ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகியாக திகழும் ஆலியா மானசா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இந்த தொடரில் இவர் அற்புதமாக நடித்ததை எடுத்து பல சீரியல் வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது, அத்தோடு இந்த சீரியலில் தன்னோடு இணைந்து நடித்த சக நடிகரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஆல்யா மானசா..

விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி டிஆர்பி ரேட்டை எகிர வைக்கும் சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலை மாற்றி இருக்கிறார்.

ஆலியா மற்றும் சஞ்சீவிக்கு திரைப்பட நட்சத்திர ஜோடிகளுக்கு இருக்கும் அந்தஸ்தும் பேரும் உள்ளது என்றால் மிகை ஆகாது. நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆலியா மானசா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பாக சீரியலில் நடிகர்களுடன் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததை பார்த்து விட்டு என் கணவர் என்னிடம் என்ன பண்ணிட்டு இருக்க சீரியல்ல என்று கேட்பார்.

வேறு நடிகரோடு ரொமான்ஸ் பண்ணும் போது..

அப்படி கேட்பதோடு நின்று விடாமல் அவர் ஒரு லுக் விடுவார், பாருங்கள் அப்போது தான் இவரும் மற்ற கணவர்களைப் போல நடந்து கொள்கிறார். எவ்வளவு பொசசிவாக இருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொள்வேன் என ஆலியா பேசி இருக்கிறார்.

எவ்வளவு தான் நாகரிக வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் இருந்தாலும் தன்னுடைய மனைவி தனக்கு மட்டுமே என்ற விஷயமானது ஆண்கள் மத்தியில் வேரூன்றி இருப்பது நட்சத்திர தம்பதிகளின் விஷயத்திலும் உண்மையாகி உள்ளது.

என் கணவர்..ஓபன் டாக்..

இதனை அடுத்து சீரியல் களில் மற்ற கலைஞர்களோடு இணைந்து நடிக்கும் போது குறிப்பாக ரொமான்ஸ் மற்றும் அது மாதிரியான காட்சிகளில் வேறு நடிகரோடு நடிக்கின்ற சமயத்தில் தன் கணவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை ஓபன் ஆக கூடிய ஆலியா மானசாவின் பேச்சு இணையத்தில் வைரலாக உள்ளது.

இதை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் பலரும் அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் ஆடியோ கூறியது முற்றிலும் உண்மைதான் ஒவ்வொருவரும் இது போலத்தான் நடந்து கொள்வார்கள் என்று அவருக்கு ஆதரவாக பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version