இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்து கமல் நடித்த திரைப்படம் இந்தியன் பார்ட் 2. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக அமைந்தது.
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் ஷங்கருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படமாகும். ஷங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிகமாக மக்களுக்கு பிடித்த திரைப்படம் என்றால் அதில் இந்தியன் திரைப்படமாகதான் இருக்கும்.
இந்தியன் முதல் பாகம் கொடுத்த வரவேற்பு:
முக்கியமாக அந்த விடுதலைப் போராட்ட காட்சிகள் எல்லாம் மிகவும் மக்களை வசிகரிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் அந்த அளவிற்கு மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக படத்தின் முதல் கதை போலவே இரண்டாம் கதையும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
முதல் பாகத்தில் எப்படி லஞ்சத்துக்கு எதிராக இந்தியன் தாத்தா போராடி வருகிறாரோ அதேதான் இரண்டாம் பாகத்திலும் செய்கிறார், அதற்கு எதற்கு இரண்டாம் பாகம் என்று ஒன்று எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கேள்வியாக இருந்தது.
கதை அம்சத்தை இயக்குனர் ஷங்கர் புதிதாக மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்பது குறையாக இருந்தது. இன்னும் சிலர் கூறும் பொழுது படத்தின் முதல் பாகம் வந்த காலகட்டங்களில் எழுத்தாளர் சுஜாதா ஷங்கருக்கு பெரிதும் உதவினார்.
இந்தியன் 2இல் பிழைகள்:
ஆனால் இப்பொழுது அவருக்கு உதவி இல்லாத காரணத்தினால் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் அந்த அளவிற்கு திருப்திகரமாக இல்லை என்றும் பேச்சுக்கள் இருந்து வந்தது. அதேபோல வசூலிலும் பெரும் தோல்வியை கண்டது இந்தியன் 2 திரைப்படம்.
இதனால் லைக்கா நிறுவனமே கவலையில் இருப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு லைக்கா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்காததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அனிருத் இசை பழைய ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அதேபோல படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பல சண்டை காட்சிகள் வேண்டுமென்றே அதிக நீளத்துக்கு எடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக மக்கள் குறை கூறினர். இதனாலே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே படத்தை மீண்டும் எடிட் செய்து நேரத்தை குறைத்து வெளியிட்டனர். அப்பொழுதும் கூட படத்திற்கு வரவேற்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடிகை அம்பிகா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனக்கு இருந்த ஒரே குறை என்னவென்றால் இன்னமும் படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம். படத்தின் நீளத்தில் 12ல் இருந்து 15 நிமிடங்கள் இன்னமும் குறைத்து இருந்தால் படம் இன்னமும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது என பதிலளித்திருக்கிறார் நடிகை அம்பிகா.