கர்ப்பமாக இருக்கிறாரா எமி ஜாக்சன்….? நீண்ட நாள் காதலருடன் இரண்டாம் திருமணம்! வைரல் போட்டோஸ்!

இங்கிலாந்து நாட்டின் பிரபலமான மாடல் அழகியான எமி ஜாக்சன் மாடலிங் துறையில் இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிறகு நடிகையானார்.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் என்ற நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சனுக்கு தற்போது 32 வயதாகிறது.

நடிகை எமி ஜாக்சன்:

Amy Jackson

ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

இளம் வயதிலேயே மாடல் அழகியாக இவர் வந்துவிட்டார். 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.

அத்துடன் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்றுள்ளார்.

மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருந்த எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக நடிகையாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.

இதுதான் இவரது முதல் திரைப்பட அனுபவம் என்றே சொல்லலாம். ஆனால் அந்த படத்தை பார்த்தால் அவரது முதல் படம் என்று சொல்லவே முடியாது .

மதராசபட்டினம்:

அந்த அளவுக்கு அவர் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

1947 ஆம் ஆண்டுகளின் கதைகளத்தில் உருவாக்கப்பட்ட மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சன் துரையம்மா என்ற கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது பாராட்டுகளையும் பெற்றார்.

முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 , உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

இவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் மெகா பட்ஜெட்டில் வெளியாகி பெரிய பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்த திரைப்படங்கள் தான்.

நீண்ட நாள் காதலருடன் திருமணம்:

அதனால் இவர் மிகப் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பெரிய அளவில் பேமஸ் ஆக்கினார். தமிழை தாண்டி ஹிந்திலும் அதிக படங்களில் நடித்த கவனத்தை செலுத்தி வந்தார் ஏ.மி ஜாக்சன்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலரான எட்வெஸ்ட்விக் உடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவருடன் லிவிங் லைஃபில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து பின்னர் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

இதனிடையே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் .

மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா எமி ஜாக்சன்:

அவரை பிரிந்த வேகத்திலேயே ஏமி ஜாக்சன் அடுத்ததாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரான எட்வெஸ்ட்விக் உடன் வாழ்ந்து வந்தார் .

இவர் ஒரு பிரபலமான பிரிட்டிஷ் நடிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். நீண்ட நாட்களாக காதல் ஜோடிகளாக வல ம் வந்து கொண்டிருந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் .

அதைத் திருமண புகைப்படங்களை இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

கிறிஸ்துவ முறைப்படி வெண்ணிற அழகான ஆடையை அணிந்திருக்கும் இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

முன்னதாக எமி ஜாக்சன் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்யும்போது கர்ப்பமாக இருந்தார். கர்ப்பம் தரித்த பிறகுதான் அவர் திருமணமே செய்து கொண்டார்.

அதே போல் தற்போது மீண்டும் எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார? எட்வெஸ்ட்விக் குழந்தையை தன்னுடைய கருவின் சுமக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திருமணம் இப்பொது நடக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version