“நீங்க நெனைக்குற மாதிரி என் லைஃப் இல்லடா..” அனிதா சம்பத் கண்ணீர்..!

விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை ஏழு சீசன்களை கடந்துவிட்ட நிலையில் விரைவில் எட்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பலரும் பல்வேறு வகையில் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகையாக அனிதா சம்பத் மாறினார்.

நீங்க நெனைக்குற மாதிரி..

அனிதா சம்பத்தை பற்றி அதிக அளவு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் டிவியை ஓபன் செய்தாலே செய்தி வாசிப்பாளராக நமக்கு நன்கு அறிமுகமான இவர் தமிழ் திரைப்படங்களான காப்பான்,தெய்வமச்சான் மற்றும் காலங்களில் அவள் வசந்தம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டதை அடுத்து இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

அத்தோடு பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய சமயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையோடு இருந்ததாக சொன்ன அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை தற்போது நினைவு கூர்ந்து பேட்டி ஒன்றில் பேசினார்.

என் லைஃப் இல்லடா..

மேலும் அந்தப் பேட்டியில் பேசும்போது பிக் பாஸில் இவர் கலந்து கொண்டதை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் அது பற்றி எந்தவிதமான தனது கருத்தையும் அவர் வெளியிடவில்லை. இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகு நான் திரும்பி வந்த போது என் இழப்பை என்னால் மறக்கவே முடியவில்லை.

இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு என் தாய் தந்தை மற்றும் கணவரிடம் விடை பெற்று சென்றதை அடுத்து 85 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக விளையாடினேன்.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த போதும் 15 நாட்கள் தனிமைபடுத்திக் கொண்ட நான் மொத்தமாக 100 நாட்கள் கடந்து என் தந்தையை காண சென்ற போது அவருடைய உடலை மட்டும் தான் என்னால் பார்க்க முடிந்தது.

நூறு நாட்களுக்கு முன்பு சந்தோஷத்தோடு அப்பா அம்மா கணவரிடம் டாடா சொல்லிவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நான் தற்போது அவரது நினைவுகளை மட்டும் தான் சுமந்தபடி இருக்கிறேன்.

அனிதா சம்பத் கண்ணீர்..

நீங்களே அந்த கடுமையான நிலையை நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு என் நிலைமை எப்படி இருந்து இருக்கும் என்று உங்களுக்கு புரிந்துவிடும்.

இதைத் தொடர்ந்து நான் அந்த மனநிலையில் இருந்தபோது கூட போட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் என்னை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்தவுடன் பெற்றோரை வெளிநாட்டுக்கு டூருக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தேன். மேலும் அங்கு இருக்கும் போது கூட கம்மி பட்ஜெட்டில் எங்கு டூர் செல்லலாம் என்று அடிக்கடி பேசுவேன்.

என் தாயின் தாலியை அடகு வைத்து தான் என்னை படிக்க வைத்தார்கள். அவருக்கு ஐந்து பவுனில் தாலி செயினை செய்து தர விரும்பினேன். ஆனால் இப்போது நான் யாரை கூட செல்வேன் என் அம்மாவிற்கு தாலி வாங்கி கொடுக்க முடியுமா ஆனால் நான் என்னமோ சந்தோஷமாக இருப்பது போல் பலரும் என்னை குத்தி காட்டி திட்டுகிறார்கள் என மனம் நொந்து பேசி இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version