கீர்த்தி சுரேஷ்க்கு மட்டும் தான் முதுகு இருக்கா.. என் முதுகை பாருங்கடா.. அஞ்சலி அட்ராசிட்டி.. வைரல் போட்டோஸ்..!

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தில்தான் முதன்முதலாக அவர் அஞ்சலிக்கு தமிழில் வாய்ப்புகளை வழங்கினார்.

இயக்குனர் ராம்தான் தமிழ் சினிமாவில் அஞ்சலியை அறிமுகப்படுத்தினார் என்னும் காரணத்தினாலேயே இப்போது வரையிலும் இயக்குனர் ராம் திரைப்படத்தில் தொடர்ந்து அஞ்சலி நடித்து வருகிறார். கற்றது தமிழ் திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஜீவா படத்தில் அறிமுகம்:

அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை ஆனால் படத்தில் அஞ்சலியின் ஆனந்தி கதாபாத்திரம் வெகுவாக வரவேற்பு பெற்ற கதாபாத்திரமாக இருந்தது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த அஞ்சலிக்கு அங்காடி தெரு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

அங்காடித்தெரு திரைப்படம் டி நகரில் இருக்கும் ஜவுளி கடையில் பணிப்புரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கூறும் விதத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு படம் வெளியான காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அதனை தொடர்ந்து அஞ்சலியின் மார்க்கெட் என்பதும் தமிழ் சினிமாவில் உயர துவங்கியது. தொடர்ந்து தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி.

அஞ்சலி எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த போது அவருக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்து வந்தது ஆனால் அது வதந்தி என பிறகு அஞ்சலியே தெரிவித்திருந்தார்.

உடல் எடை பிரச்சனை:

நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு பிறகு உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. பிறகு சீக்கிரத்திலேயே அதிகமாக பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் அஞ்சலி.

அதனை தொடர்ந்து மீண்டும் உடல் எடையை குறைத்த அஞ்சலி தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்காமல் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். தெலுங்கு சினிமாவில் உடல் எடையை குறைத்து அவர் நடனமாடிய பாடல்கள் அதிக பாப்புலர் ஆனது.

இதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கி இருக்கிறது. தற்சமயம் இயக்குனர் ராம் இயக்கும் ஏழுமலை ஏழு கடல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் சமீபத்தில் அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்களும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய பட வெளியீட்டு விழா ஒன்றில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவிற்கு படு மோசமாக ஜாக்கெட் அணிந்து கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், அஞ்சலியும் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் அளவிற்கு வந்திருக்கிறார். இதனை பார்க்கும்போது கீர்த்தி சுரேஷ்சுக்கு மட்டும் தான் முதுகு இருக்கா..? என் முதுகை பாருங்கடா.. என்று கூறுவது போல அஞ்சலியின் அட்ராசிட்டி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version