பிரபல நடிகர் கொடுத்த அழுத்தம்.. அஞ்சலியின் ட்விட்டர் பதிவு.. விளாசும் ரசிகர்கள்..!

இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதனை தொடர்ந்து அவர் நடித்த அங்காடி தெரு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் ஆனந்தி கதாபாத்திரமும் சரி, பிறகு அங்காடி தெரு திரைப்படத்தில் வந்த கதாபாத்திரமும் சரி, அஞ்சலிக்கு முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தன. அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தில் கதை நகராது என்கிற ரீதியில் அவை அமைந்திருந்ததால் அஞ்சலிக்கு அது வரவேற்பை பெற்று கொடுத்தது.

மார்க்கெட்டை பிடித்த அஞ்சலி:

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்று வந்தார் அஞ்சலி. ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைய தொடங்கின. இந்த சமயத்தில் கொஞ்சம் கவர்ச்சியை காட்டத் துவங்கினார் அஞ்சலி.

தொடர்ந்து விமல் நடித்த கலகலப்பு, ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டத் தொடங்கினார் அஞ்சலி. இருந்தாலும் கூட அவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தெலுங்கில் வாய்ப்பு:

இதனை தொடர்ந்து தெலுங்கில் கவர்ச்சிக்கு அதிக வரவேற்பு உண்டு என்பதை அறிந்த அஞ்சலி அங்கு சென்று ஒரு ஐட்டம் பாடலில் ஆடினார். அது அதிகமான வரவேற்பு பெற்றதை அடுத்து தெலுங்கு சினிமாவில் அஞ்சலிக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பட விழாவில் அஞ்சலி கலந்து கொண்ட பொழுது நடிகர் பாலையா அவரை மேடையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணா குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

சர்ச்சைக்கு பதில்:

பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவே பாலகிருஷ்ணா இருந்து வருகிறார். ஏற்கனவே நடிகை விசித்ரா பாலகிருஷ்ணா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு புகாரை கொடுத்திருந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அஞ்சலி கூறும் பொழுது பாலகிருஷ்ணாவும் நானும் மிகவும் நட்பாக பழகி வருகிறோம். நண்பர் என்ற முறையில்தான் பாலையா என்னை தள்ளினார். இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்று எதுவும் இல்லை என்று கூறி இருந்தார்.

ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்களால் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலகிருஷ்ணா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் இப்படி ஒரு பதிவை அஞ்சலி போட்டு இருக்கிறார் என்று கூறி அஞ்சலியை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version