யார் இந்த அஞ்சு அரவிந்த்..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில காலங்கள் மட்டுமே இருந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இருந்த ஒரு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றெடுப்பார்கள். பொதுவாக நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் ஃபீல்ட் அவுட் ஆவது என்பது சகஜமாக நடக்கும் விஷயம்தான்.

அதனால் ஒரு நடிகை சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் என்றால் அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆனது என்று யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படி சினிமாவில் இருந்த குறுகிய காலங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவராக இருந்தவர் நடிகை அஞ்சு அரவிந்த்.

அஞ்சு அரவிந்த்:

மலையாளம், தமிழ், கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் அஞ்சு அரவிந்த். 1995 இல் தொடங்கி கிட்டத்தட்ட 2014 வரையிலுமே சினிமாவில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருந்து வந்தது. 1995ல் அக்ஷரம் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் நடிகை அஞ்சு அரவிந்த்.

அதற்குப் பிறகு 1996 ஆம் ஆண்டு தமிழில் பூவே உனக்காக திரைப்படத்தில் அறிமுகமானார். அஞ்சு அரவிந்த் அதுவும் பூவே உனக்காக திரைப்படத்தில் இதற்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கதாபாத்திரம் மூலமாக ஓரளவு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருந்தார் அஞ்சு அரவிந்த்.

தமிழில் அறிமுகம்:

அதற்கு பிறகு தமிழில் எனக்கு ஒரு மகன் பிறப்பான். அருணாச்சலம் ஒன்ஸ்மோர் மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. எல்லா திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார்.

மலையாள சினிமாவோடு கம்பேர் செய்யும் பொழுது தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்தார் என்றுதான் கூற வேண்டும். ஒரு வருடத்திற்கு 10 படங்கள் நடிக்கிறார் என்றால் அதில் ஏழு திரைப்படங்கள் மலையாள படங்களாகதான் இருக்கும்.

பலரும் அறிந்திடாத ரகசியம்:

மூன்று படங்கள்தான் தமிழில் இருக்கும் அவ்வப்போது கன்னடத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சு அரவிந்த். பிறகு இவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மஞ்சு அரவிந்த் அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு அவரது மாமாவான தேவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக செல்லவில்லை சில வருடங்களிலேயே அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வினை சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அஞ்சு அரவிந்த். தமிழில் அவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட மலையாளத்தில் தொடர்ந்து 2020 வரை நடித்து வந்திருக்கிறார் அஞ்சு அரவிந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version