42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனுஷ்கா செட்டி. இவர் மிகக் குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகையாக உயர்ந்தார்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக அவதாரம் எடுத்தார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அனுஷ்கா செட்டி.

நடிகை அனுஷ்கா ஷெட்டி:

யோகாசன டீச்சர் ஆகவும் பின்னணி படகியாகவும் இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தார்.

இவரது திரைப்படம் 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் திரைப்படம் தான்.

இந்த படத்தில் சாஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதை அடுத்து 2000 காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார் அனுஷ்கா செட்டி.

2006 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் இரண்டு எனும் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் அவருக்கு கொடுத்தது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அருந்ததி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுக்க பிரபலமானார்.

அந்த படத்தில் அவரது நடிப்பு அவ்வளவு சிறப்பாகவும் அவ்வளவு யதார்த்தமாகவும் இருந்ததால் வெகு சீக்கிரத்தில் ரசிகர்கள் ஒட்டுமொத்த மனதிலும் இடம் பிடித்தார்.

வெற்றி திரைப்படங்கள்:

மக்கள் மனதில் அருந்ததியாகவே வாழ்ந்து வந்தார். பின்னர் பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமாதேவி பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் அனுஷ்கா செட்டி நடித்திருக்கிறார்.

குறிப்பாக இதில் பாகுபலி திரைப்படத்தில் நடித்த போது அனுஷ்கா செட்டிக்கு உலகம் முழுக்க பெயரும் புகழும் தேடி வந்தது என்றே சொல்லலாம்.

இப்படத்தில் அனுஷ்கா செட்டி தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார்.

வரலாற்று சிறப்புமிக்க கதையான பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதியும்படி அமைந்தது.

பாகுபலி திரைப்படத்தில் நடித்தபோது அப்பளத்தின் ஹீரோவான பிரபாஸுடன் அனுஷ்கா செட்டி காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் அதன்பின் இருவருமே அதை மறுத்தனர். அவர்கள் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் அதைப்பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருந்து வந்தார்கள்.

அனுஷ்காவுக்கு திருமணம்:

அனுஷ்கா செட்டியின் திருமணம் செய்திகள் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எடுக்காதது போல் இருந்து வந்தார்.

இப்போது 43 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஆரம்பித்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஆம், பிரபல நடிகை அனுஷ்கா கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இனிய பக்கங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கும் நடிகை அனுஷ்கா படங்களிலும் அதிகப்படியாக நடிப்பதில்லை.

திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்த பொழுது நிஜமாகவே உடல் எடை கூடி நடித்தார்.

ஆனால் அவர் நினைத்தது போல எளிமையாக மீண்டும் அவர் ஒல்லியாக முடியவில்லை எவ்வளவு சிரமப்பட்டு உடல் எடை குறைத்தாலும் மீண்டும் அவருக்கு உடல் எடை கூடி விடுவது ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது.

இதனால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருந்த நடிகை அனுஷ்கா தற்பொழுது 42 வயதில் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.

விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை அறிந்த ரசிகர்கள் நடிகை அனுஷ்காவிற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version