கல்யாணமே வேஸ்ட் பெண்களுக்கு தேவையில்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை!!

ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமண பந்தம் பற்றி நம் கலாச்சாரத்தை கேலி செய்ய கூடிய அளவு பிரபல மலையாள திரைப்பட நடிகை பாமா பேசியிருக்கும் பேச்சு தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

1000 பொய் சொல்லியாவது ஒரு பெண்ணுக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அது போல பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் தன் மகளை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க கூடிய வரங்களை தேடி பல லட்சங்களில் செலவுகளை செய்து திருமணம் முடித்து வருகிறார்கள்.

நடிகை பாமா..

நடிகை பாமா மலையாளம், தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக் கூடிய நடிகையாக இவர் 2007- ஆம் ஆண்டில் வெளி வந்த ஏகே லோகிதாஸ் இயக்கிய நிவேதியம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் எல்லாம் அவன் செயல் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆன இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் நடிகையாக மாறுவதற்கு முன்பே சூர்யா தொலைக்காட்சியில் தாலி என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிந்திருக்கும் இவர் கிறிஸ்துவ பக்தி ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோல்கள் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து கன்னட திரை உலகில் நடிக்கச் சென்ற இவர் அங்கும் சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை பாமா மிகச்சிறந்த பின்னணி பாடகி ஆகவும் திகழ்கிற இவர் திரை உலகில் தனது முதல் பாடலை பைக் என்ற திரைப்படத்தில் ராகுல்ராஜ் இசையில் கண்ணில் கண்ணில் எனும் பாடலை பாடியிருக்கிறார். எனினும் இந்த படம் திரைக்கு வராமல் போனது.

பெண்களுக்கு கல்யாணமே வேஸ்ட் தேவையே இல்ல..

இந்நிலையில் திரை உலகில் ஜொலிக்கும் போதே 2020-ஆம் ஆண்டு இவர் அருண் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அடுத்து கௌரி என்ற மகள் பிறந்தார்.

இந்நிலையில் பாமா சில தனிப்பட்ட காரணத்தால் தனது கணவரை பிரிந்ததை அடுத்து அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்தி விட கூடிய வகையில் தனது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப்பதிவில் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை கொடுத்து எந்த பெண்ணிற்கும் திருமணம் செய்யக்கூடாது என சொல்லி இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களை திருமணம் செய்து வாழ்க்கையில் இணைந்து வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாமல் திருமணம் செய்வது தவறு என்ற கருத்தை நிச்சயமாக சொல்லி இருப்பதால் இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாமா கொடுத்த விளக்கம்..

இந்நிலையில் இவரது கருத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தன்னுடைய விளக்கத்தை தந்திருக்கும் நடிகை பாமா வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்பது குறித்து தான் பேசினேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும் பெண்கள் யாரையும் திருமணம் செய்ய வேண்டாம் எனவோ அல்லது செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை என்று அந்தர் பல்டி அடித்திருக்கும் பாமாவின் பேச்சு அனைவரது மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அவர் கூறிய விஷயத்தில் இருக்கின்ற உண்மை கருத்துக்களை எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக தனக்கு துணையாக வரக்கூடிய வரன் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு செயல்படுவது மற்றும் திருமணம் செய்து கொள்வது நல்லது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

எனினும் எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்பதை யாருக்கு தெரியும். பலாப்பழத்தை சுருதி போட்டு பார்ப்பது போல மாப்பிள்ளைகளை தேர்வு செய்து பார்க்க முடியுமா? என்ற கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன விஷயங்களில் ஒன்றாக மாறி உள்ளது. மேலும் இந்த விஷயம் குறித்து அறிந்து கொண்ட அனைவரும் அவர்களுடைய நண்பர்களுக்கு இதை ஷேர் செய்துவரித்தார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version