கணவரை விவாகரத்து செய்த நடிகை பாவனா…? தனிமையில் நகரும் வாழ்க்கை நினைத்து வேதனை!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையான பாவனா 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த நடிகையாக பாராட்டப்பட்டார்.

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை பாவனா:

முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்திகு தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் பாவனாவின் நடிப்பு எல்லோரது கவனத்தை ஈர்த்தது. அதுதான் அவரது முதல் திரைப்படம் கூட.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் அசல் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே அவர் மலையாளத்திலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பாலியல் பலாத்காரம்:

பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்ட நடிகை பாவனா 2017 ஆம் ஆண்டு மலையாள படம் ஒன்றில் நடித்துவிட்டு ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது இரவு நேரத்தில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து நடத்தப்பட்ட கெடுபிடி விசாரணையில் பாவனாவின் பலாத்கார விஷயத்திற்கு பின்னணியில் பிரபலம் மலையாள நடிகர் திலீப் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

அப்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை அடுத்து நடிகை பாவனா சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே தனது நீண்ட நாள் காதலரான நவீன் என்பவரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி விட்டார் நடிகை பாவனா.

அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக் கொள்ளும் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார் .

கணவருடன் விவாகரத்து:

சில மாதங்களுக்கு முன்னர் கூட அவரது மடிமீது அமர்ந்து எடுத்துக்கொண்டு முத்தமிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இதனால் பாவனா தன்னுடைய கணவர் நவீனை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் இந்த தகவல் தீயாய் பரவியது. இந்நிலையில் தற்போது இந்த வதந்திக்கு பதில் அளித்து இருக்கும் நடிகை பாவனா தனது Instagram பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வது கிடையாது. நானும் என் கணவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை நான் சோசியல் மீடியாவில் பி[போஸ்ட் பண்ணுவது கிடையாது.

அதனால் நான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டேன். தனிமையில் வாழ்க்கை நகர்த்தி வருகிறேன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

பாவனாவின் விளக்கம்:

இருந்துவிட்டு போகட்டும்… அப்படியே இருக்கட்டும்… நீங்கள் நினைப்பது தவறு அதை ஏன் நான் நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அவர்கள் அப்படி நினைப்பதால் என் கணவர் உடன் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு அதை உண்மை என நம்ப வைக்க வேண்டும் என்பது எனக்கு அவசியம் கிடையாது.

விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து வருகிறோம் என பதிலளித்திருந்தார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நடிகை பாவனாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து அவரை பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version