அன்று இரவு நடந்தது இது தான்..! கடத்தி சென்று கொடுமை..! வெளிப்படையாக கூறிய பாவனா..!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. தமிழில் தீபாவளி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை பாவனா அச்சுறுத்தும் வகையில் கடத்தப்பட்டார்.

அதில் நடிகை பாவனா கூறும் பொழுது ஒருமுறை படப்பிடிப்புக்காக டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுது மர்மமான நபர்கள் காரை மறைத்து அதில் ஏறினார்கள். அப்பொழுது அவர்கள் ஓட்டுநருடன்தான் எங்களுக்கு பிரச்சனை அவருடன் நாங்கள் பேசிவிட்டு சென்று விடுவோம்.

பாவானாவிற்கு நடந்த சம்பவம்:

உங்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் எங்கு இறங்க வேண்டும் என்று கூறுங்கள். அங்கு உங்களை இறக்கிவிட்டு விடுகிறோம் என்று கூறினார்கள். நானும் சரி என்று நான் இறங்க வேண்டிய இடத்தை கூறினேன்.

அவர்கள் என்னுடைய காரில் ஏறிக்கொண்டு அழைத்துச் சென்றார்கள். ஆனால் நான் சொன்ன வழியில் என்னை அழைத்துச் செல்லாமல் வேறு வழியில் அழைத்துச் சென்றார்கள். மேலும் அவர்கள் நான் ஒரு காணொளி வீடியோவை அவர்களுக்கு பேசி தர வேண்டும் என்று கூறினார்கள்.

அப்படி நான் பேசி தராத பட்சத்தில் என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்கள். அந்த இடத்தில் நான்கு நபர்கள் இருப்பதாகவும் அவர்கள் எனக்கு போதை மருந்துகளை கொடுத்து என்னை பாலியல் கொடுமை செய்வார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள்.

காருக்குள் வந்த அந்நியர்கள்:

மேலும் அவற்றையெல்லாம் ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு என்னை பயமுறுத்த போவதாகவும் கூறினர். அதனால் அவர்கள் சொல்லும்படி காணொளியை நான் பேசித் தரும்படி கூறினார்கள். அதற்குப் பிறகுதான் ஓட்டுனர்தான் தேவை என்று அவர்கள் ஆரம்பத்தில் கூறியது என்னை ஏமாற்றுவதற்காக செய்த வேலை என்று எனக்கு தெரிந்தது.

இதனால் நான் மிகுந்த பயத்தில் இருந்து வந்தேன். அப்பொழுது அவர்கள் இடையிடையே நிறைய போன் கால் செய்து சிலவரிம் பேசி வந்தார்கள் எனவே யாரோ ஒருவரின் தூண்டுதலில்தான் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தது.

பிறகு காவல்துறையில் நான் இது குறித்து புகார் அளிக்கும்போது அந்த காரின் எண் என்ன என்பதை சரியாக கூறினேன். அதேபோல் அவர்கள் எந்த நபர்களிடம் பேசினார்கள் என்பதையும் நான் சரியாக கூறினேன் என்று அந்த நிகழ்வு குறித்து பகிர்ந்து இருக்கிறார் நடிகை பாவனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version