அச்சு அசல் தேவயாணியே தான்.. டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் தேவயானியின் மகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. 2000 ஆவது ஆண்டு கால கட்டங்களில் இவர் பல முன்னணி தமிழ் நடிகர்களாக இருந்த நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு தனக்கு என்று ஓர் மிகப் பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டு இருந்தவர்.

அச்சு அசல் தேவயாணி தான்..

நடிகை தேவயானி நடித்த படங்களில் அவரது குழந்தைத்தனமான பேச்சும் தனித்துவமான நடிப்பும் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்தது. இதனை அடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

திரைப்படங்களில் கூடுதல் கவர்ச்சியை காட்டாமல் படங்களுக்கு தேவை என்றால் கவர்ச்சியும் காட்ட தயங்காமல் நடிக்கக்கூடிய மிகச்சிறப்பான நடிகைகளில் ஒருவராக தேவயானி திகழ்கிறார்.

அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த காதல் கோட்டை, சூரிய வம்சம், பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸ் கிட் தந்த படங்களாகவும் திகழ்ந்தது.

மேலும் திரைப்படங்களில் நடித்ததோடு நின்றுவிடாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

சின்னத்திரை பெரிய திரை என்ற இரட்டை குதிரையில் பயணம் செய்த நடிகை தேவயானி சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், முத்தாரம் போன்ற தொடர்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்தார்.

டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும்..

இதனை அடுத்து பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடித்து வருவதால் நடிகை தேவயானியும் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.

இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து குடும்பத்தோடு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவயானி பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நேர்காணலின் போது நடிகை தேவயானி கூறுகையில் எனது இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு ஒரு பிரபல நடிகரை மிகவும் பிடிக்கும். அவர் படம் ரிலீஸ் சென்றாலே தோழிகளோடு முதல் நாளை படத்துக்கு சென்று விடுவார், அவளுக்கு சாப்பாடு ஊட்டும் போது கூட அந்த நடிகரின் படத்தை போட்டுத் தான் ஊட்டி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

 தேவயானி மகள்..

அப்படி எந்த நடிகர் அந்த பெண்ணுக்கு பிடிக்கும் என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் .அப்படி யோசித்து மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்தான்.

இதனை அடுத்து எப்படியாவது ஒரு படத்திலாவது நடிகர் ஷாருக்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது தான் அவளின் ஆசை என்று தேவயாணி கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு விரைவில் அந்த ஆசை பூர்த்தியாகும் என்று ரசிகர்கள் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு அச்சு அசல் தேவயானியை போல இருக்கும் அவர் மகள் அவர் விருப்பப்படி டாப் ஹீரோவுக்கு ஜோடியாக கூடிய காலம் விரைவில் வரும் என்று அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version