கனகாவின் அம்மா தேவிகா பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்..!

நடிப்பின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய நடிகை தேவிகா கடைசி வரை கதாநாயகியாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரில் பிறந்தவர்.

தன்னுடைய வசீகர நடிப்பாலும், சிரிப்பாலும் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதோடு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர்.

கனகாவின் அம்மா தேவிகா..

இவர் திரைப்படங்களில் அற்புதமான முறையில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் வாழ்க்கையை சரியாக தேர்வு செய்யாததால் திரை உலகில் வெற்றி பெற்ற இவர் மண வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று கவிஞர் கண்ணதாசன் கூட சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இன்று இருக்கும் நடிகைகளை விட மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய தேவிகா படப்பிடிப்பு தளத்துக்கு குறித்த நேரத்தில் வருவதோடு தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டு நடித்துக் கொடுப்பார்.மேலும் பணம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் இவரிடம் கிடையாது.

சில சமயங்களில் படப்பிடிப்பு நடக்கும் போது இயக்குனர் ஏதாவது இவரை குறை சொல்லினாலோ திட்டினாலோ அந்த இடத்தில் அழுது விடுவாரே ஒழிய முறைத்துக் கொண்டு சண்டை போட்டு பேச மாட்டார்.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்கு பேசுவதை விட தமிழ் பேசுவதை தான் மிகவும் அழகாக பேசி உச்சரிக்க கூடிய தன்மை கொண்ட நடிகையாக இருந்திருக்கிறார்.

தேவிகா பற்றி பலரும் அறியாத விஷயங்கள்..

மிக அற்புதமான நடிகையான தேவிகா தனது நடிப்பில் கண்கள் மூலம் எக்ஸ்பிரசனை வெளியிடுவதில் கை தேர்ந்தவர் என்று சொல்லலாம்.

இவரது இயற்பெயர் பிரவீனா இதனை அடுத்து திரையுலகிக்காக தனது பெயரை தேவிகா என்று மாற்றி அமைத்துக் கொண்ட இவர் தெலுங்கில் வெளிவந்த நாட்டியதாரா என்ற படமானது தமிழும் தமிழிலும் இவரது உண்மையான பெயரில் வெளி வந்தது.

திரையுலகில் பத்மினி மற்றும் நடிகையர் திலகம் இருந்த காலத்தில் அவர்கள் இருவருக்கும் அடுத்த நிலையில் தேவிகா இருந்ததோடு மட்டுமல்லாமல் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பில் தன்னை பாட்டை தீட்டவே என்பதற்காக நடிகர் சஹஸ்ரநாமம் நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இவர்களின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் முத்துராமனும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகக் குழுவில் சேர்ந்ததின் மூலம் தனது பெயரை மாற்றிக் கொண்ட இவர் தனது நடிப்பையும் வளர்த்துக்கொண்டார். அத்தோடு தமிழ் பேசவும் கற்றுக் கொண்டார்.

ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

மூத்தா சீனிவாசனால் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் எஸ் எஸ் ஆர் உடன் இணைந்து நடித்த தேவிகா தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களையும் பெரிய பேனர் படங்களையும் தோற்கடித்து மகத்தான வெற்றி பெற்றது.

இதில் ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.மேலும் பாவமன்னிப்பு, பாசவந்தம், அன்னை இல்லம், ஆண்டவன் கட்டளை, கர்ணன், முரடன் முத்து, சாந்தி, நீலவானம் ,பழனி, பலே பாண்டியா போன்ற குறிப்பிடும்படியான நிறைய படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக தேவிகா நடித்தார்.

நீல வானத்தில் தேவிகா நடிப்பு மிகவும் அற்புதம் என எல்லோராலும் பாராட்டப்பட்டது.அத்துடன் ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் வரும் அழகே வா என்ற இந்த பாடலை கதையின் ஓட்டத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் கட்டாயமாக தேவைதான் அதை அளவோடு தந்திருப்பார்.

தேவிகா அவர்கள் பெரிதாக கவர்ச்சி ஏதும் காட்டாமல் தனது கண்களிலேயே உணர்ச்சிகளை காட்டி நம்மையும் சுண்டி இழக்க வைக்கும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் தேவிகா நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் பெரிய வெற்றி படங்களாகவும் அமைந்து.

வெகுளி பெண் என்ற படத்தை தயாரித்த தேவிகாவிற்கு பொருத்த நட்டம் ஏற்பட்டதை அடுத்து மனமுடைந்து போன இவர் கடன் சிக்கித் தவித்தார்.

மேலும் மகள் கனகாவின் திரைப்பட வாழ்க்கையில் தலையிட்டதை அடுத்து அவரது மார்க்கெட்டும் காலியாக மனம் உடைந்து போன தேவிகா 60 வயது முடிவதற்கு முன்பே உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நம்மை விட்டு பிரிந்து சென்றார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version