ஆட்டோகிராஃப் பட நடிகை கோபிகாவா இது..? ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!

முட்டை கண்ணழகு மூக்கு முழியுமாக கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக வந்து இங்கு மிகப்பெரிய ஹீரோயின் நட்சத்திர அந்தஸ்தை ஒரு காலத்தில் பிடித்து வைத்திருந்தவர் தான் நடிகை கோபிகா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

நடிகை கோபிகா:

குறிப்பாக 2000 காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தார் நடிகை கோபிகா. இவர் முதன் முதலில் இவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒல்லூர் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.

அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கோபிகா தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கோபிகா நடித்திருந்தார்.

இதில் செந்தில் காதல் செய்யும் பெண்ணாக லத்திகா என்ற கேரக்டரில் கோபிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

நடிகை கோபிகா கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த வீராப்பு என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

வெற்றித்திரைப்படம்:

அதை அடுத்து தமிழில் எம் மகன் திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

2006 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்திருந்தார் . இவர்களுடன் நாசர் ,சரண்யா பொன்வண்ணன், வடிவேலு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் .

இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது இதனால் நடிகை கோபிகாவுக்கு மிகப்பெரிய ஸ்கோப் உண்டாகி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதை அடுத்த சிம்புவுக்கு ஜோடியாக தொட்டி ஜெயா, பொன்னியின் செல்வன், கனா கண்டேன், ஆட்டோகிராப் மற்றும் 4 ஸ்டுடென்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

திருமண வாழ்க்கை:

இவர் வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக 2000 காலகட்டத்தில் பார்க்கப்பட்டார்.

எனினும் புது நடிகைகளின் வரவால் கோபிகாவுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக பின்னர் மார்க்கெட் இழந்து ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என முடிவெடுத்த கோபிகா கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு. எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் . தற்போது 40 வயதாகும் கோபிகா தனது குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்த வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கோபிகாவின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

ஆளே அட்ரஸ் இல்லாமல் போன கோபிகா:

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் ஆட்டோகிராப் மற்றும் எம் மகன் படத்தில் பார்த்த கோபிகாவா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இம்புட்டு அழகா மாறிட்டாங்களே என கூறி வருகின்றனர்.

குடும்பப் பெண்ணாக இருந்தாலும் குத்து விளக்கு மாதிரி அம்புட்டு அழகா இருக்காங்க. இவங்க இரண்டாவது இன்னிங்ஸை கூட சினிமாவில் தொடரலாம் வாய்ப்பு கிடைக்கும் என அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நடிகை கோபிகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version