நீ தான் புடிக்கணும்ன்னு சொன்னாங்க.. என்ன சொல்றீங்கன்னு பதறினேன்.. அரண்மனை 4 நடிகை ஹர்ஷா ஓப்பன் டாக்..!

பொதுவாக திரைப்படங்களில் திகில் நிறைந்த பேய் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறிவிடும். அந்த வரிசையில் அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் நான்காம் பகுதி வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகை ஹர்ஷா படப்பிடிப்பின் போது நிஜமீனை எப்படி கடித்தார் என்ற உண்மைகளை அண்மை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அரண்மனை 4 நடிகை ஹர்ஷா..

இந்த பேட்டியில் இவர் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனுக்கு சென்ற போது தான் தன்னுடைய கேரக்டர் பற்றி தெரிய வந்தது. இதனை அடுத்து இந்த கேரக்டரை செய்யலாம் என்று தோன்றியதாக சொல்லி இருக்கிறார்.

அத்துடன் ஆடிசனில் அவர்கள் அந்த லுக்கை செய்து காட்டும் படி சொன்னதை அடுத்து நான் அவ்வாறு செய்து காட்டுவதை அடுத்து என்னை தேர்வு செய்தார்கள். ஆனாலும் அந்த மீனை கடிக்கக் கூடிய சீன் ஆனது சஸ்பென்ஸ் ஆக தான் வைத்திருந்தார்கள்.

அப்போது எனக்கு இது போன்ற சீன் இருப்பதே தெரியாது என்று சிரித்த வண்ணம் சொல்லி இருக்க கூடிய இவர் படத்தின் முதல் பகுதியிலேயே தனது மிரட்டலான பார்வையால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் என சொல்லலாம்.

நான் தான் பிடிக்கனும்னு சொன்னாங்க..

மேலும் அந்த மீன் காட்சியை படம் பிடிக்க மூன்று முறை உயிரோடு இருக்கும் மீனை பிடித்து வந்து தந்தார்கள். எனினும் அந்த காட்சியை பலமுறை படமாக்கப்பட்டது.

ஏனென்றால் மீன் துடித்துக் கொண்டு இருப்பது போல படப் பிடிக்க வேண்டி இருந்ததால் கையில் வைத்த சில நிமிடங்களையே அது இறந்துவிட்ட கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து தத்துரூபமாக படம் பிடிக்க கடுமையான முயற்சிகளை செய்தார்கள். அந்த முயற்சியானது திரையில் பார்க்கும் போது எந்த அளவு பேசப்பட்டது என்பதை நினைத்து போது எனக்கு பட்ட கஷ்டங்கள் மறந்து போகக்கூடிய அளவு பாராட்டுக்கள் கிடைத்தது.

மேலும் பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கக்கூடிய ஹர்ஷா எப்படி அந்த பேய் பெர்ஃபார்மன்சை செய்து காட்டினார் என்பது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.எனவே முடிந்தால் ஒரு முறை செய்து காட்டுங்கள் என்று தொகுப்பாளினி கேட்டதை அடுத்து சிரித்த வண்ணம் இருந்தார்.

மேலும் தொகுப்பாளினி கேட்டதை அடுத்து அந்த பேய் கேரக்டராகவே மாறி முகத்தையும் அது போல வைத்துக் காட்டியதை பார்த்து அசந்து விட்டார்கள்.

என்ன சொல்றீங்க..

இதனை அடுத்து நடிகை ஹர்ஷாவின் திறமைக்கு இன்னும் பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களும் உருவாவார்கள் என்று பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் பீட்சா திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது போல நடிகை ஹர்ஷாவுக்கும் அரண்மனை 4 திரைப்படம் திருப்புமுனையாக அமைந்து ஒரு மிகச்சிறந்த நடிகையாக தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவார் என சொல்லலாம்.

நீங்களும் அவர் அளித்த பேட்டியை காண வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

அந்த பேயின் முக பாவனைகளை பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லது வீடியோவை ஸ்கிப் செய்து விட்டீர்களா? என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version