பிரபல நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது.. காரணம் என்ன தெரியுமா..?

திரை உலக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் தற்போது செல்வாக்கு அதிகரித்து இருப்பது போலவே மோசடிப் புகார்களும் அதிக அளவு குவிந்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஜெயலட்சுமி பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.

அந்த அளவு மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பெற்றிருக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதன் காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ஜெயலட்சுமி..

சின்னத்திரையில் மக்கள் விரும்பும் நடிகையாக திகழும் நடிகை ஜெயலட்சுமி சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் வேட்டைக்காரன், கோரிபாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர் அண்மையில் பண மோசடி வழக்கில் சிக்கி இருப்பதோடு அதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விஷயமானது தற்போது பரபரப்பாக இணையங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பண மோசடி புகார்..

இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி பாடல் ஆசிரியர் சினேகன் நடத்தி வரும் சினேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரினை அடுத்து களம் இறங்கிய தமிழக போலீசார் நடிகை ஜெயலட்சுமியின் வீட்டில் சோதனையை நடத்தி அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

அதிரடி கைது..

இவரை அதிரடியாக கைது செய்ய என்ன காரணம் என்று பார்க்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் பாடலாசிரியர் சினேகனின் சினேகம் அறக்கட்டளை ஏழை எளியோருக்கு தனது சொந்த பணத்தில் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த அறக்கட்டளையின் பெயரை போலியாக சமூக வலைத்தளங்களில் தொடங்கி பண வசூலில் ஈடுபட்டதாக ஜெயலட்சுமியின் மீது சினேகன் புகார் அளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ் புணர்ச்சியோடு மக்கள் நீதி மய்யக் கட்சியைச் சார்ந்த சினேகன் தன் மீது அவதூறு புகாரை கொடுத்திருக்கிறார் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

மேலும் சினேகன் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு பதிவு செய்ததை அடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனைத் தொடர்ந்து ஜெயலட்சுமியின் வீட்டுக்குச் சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டதை அடுத்து ஜெயலட்சுமி அந்த அறக்கட்டளையை தான் நீண்ட நாட்களாக நடத்தி வருவதாக கூறியதை அடுத்து ஒரே பெயரில் அறக்கட்டளைகளையோ, நிறுவனங்களையோ இருவருக்கும் எப்படி ஒதுக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விவகாரமானது தற்போது வலைய தளங்களில் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரே பெயரில் அறக்கட்டளைகள் இருக்குமா? அல்லது இது எப்படி நடந்தது என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு நடத்தி வருகிறார்கள்.

எனவே விரைவில் இதன் உண்மை நிலையை அறிந்து போலீசார் உரிய தகவல்களை விரைவில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam