சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் நடிகைகள் எல்லோருக்குமே சினிமாவில் எடுத்த உடனே வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. அதற்கு பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையாக சின்னத்திரை இருக்கிறது. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகலாம் என்று நடிகைகள் சீரியலை தேர்ந்தெடுக்கின்றனர்.
அப்படியாக சீரியல் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ஜீவிதா. ஜீவிதாவை பொருத்தவரை சீரியல் மூலமாக சின்னத்திரை வட்டத்தில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் இவர் முயற்சி செய்து வந்திருக்கிறார்.
கொந்தளிக்கும் நடிகை ஜீவிதா
சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான பல தகவல்களை இவர் கூறியிருக்கிறார். அதில் கூறும் பொழுது எனது குடும்பத்திற்கு நான் சினிமாவிற்கு வருவதில் சுத்தமாக விருப்பம் இருக்கவில்லை. சினிமாவிற்கு சென்றால் உன்னை கடத்தி சென்று ஏதாவது செய்து விடுவார்கள். உன்னை ஏதாவது செய்து குப்பத்தில் தூக்கி போட்டு விடுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள்.
என்னை பயமுறுத்தினார்கள் ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படுவதாக இல்லை. நான் அவர்களிடம் சினிமாவிற்கு செல்கிறேன் என கூறும் பொழுது தவறாக எதுவும் நடிக்க மாட்டேன். நம் ஊர் மானம் போகும் படி எந்த ஒரு காட்சியும் நான் நடிக்க மாட்டேன் என்று அவர்களிடம் கூறிவிட்டுதான் சென்றேன்.
MENTAL-ஆ சுத்த காரணமே
அதேபோல சினிமாவிற்கு வந்த பிறகு எனக்கு கவர்ச்சியாக நடிப்பதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் வந்தது. என்னை பார்த்த உடனேயே அவர்களுக்கு என்னதான் தோன்றும் என தெரியவில்லை. தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கிறாயா என்றுதான் முதலில் கேட்பார்கள்.
அவர்கள் கேட்பதை பார்த்தால் ஏதோ ஒரு பிட்டு படத்தில் என்னை நடிக்க அழைப்பது போலதான் எனக்கு தோன்றும். அப்படி இருந்தும் கூட நான் தொடர்ந்து நிராகரித்து வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ஜீவிதா.
இந்த நிலையில் அவருக்கு எதிரில் இருந்த தொகுப்பாளர் உங்களை கவர்ச்சியாக நடிக்க அழைப்பது உண்மையிலேயே கவர்ச்சி காட்சிகள் இருப்பதால் தானா? அல்லது வேறு நோக்கத்தில் உங்களை அப்படி அழைக்கிறார்களா என்று கேட்கப்பட்டது.
கருமம்..! கருமம்
அதற்கு பதில் அளித்த ஜீவிதா இரண்டிற்கும்தான் எல்லா இயக்குனர்களுமே உண்மையிலேயே கவர்ச்சி காட்சிகளுக்காக நடிகைகளை அழைப்பது கிடையாது. அவர்கள் அனைத்திற்கும் ஒத்து வருகிறார்களா என்பதை அறிவதற்கான ஒரு தூண்டில் போலதான் அந்த விஷயம் அதனை அறிந்து செயல்படுபவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு மாசாணி என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நமீதாவிற்கு ஒரு கவர்ச்சி கதாபாத்திரம் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்தை எனக்கு தருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
ஏன் என்னை தேர்ந்தெடுக்கிறீர்கள் என நான் கேட்ட பொழுது இந்த படத்தில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்கிறோம் என்று கூறினார்கள் அப்படி என்றால் நமீதாவிற்கு தரும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்தை எனக்கு தருவார்களா என்கிற கேள்வி எனக்கு இருந்தது என்று கூறியிருக்கிறார் ஜீவிதா. இதனாலேயே பல நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் மனநலம் பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.
இந்த மாதிரியான விஷயங்கள் தான் தொடர்ந்து பெண்கள் சினிமாவிற்கு வருவதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.