இதனால தான் பாலிவுட்டில் இருந்து விலகினேன்.. ரகசியத்தை போட்டு உடைத்த ஜோதிகா..!

மெழுகு டாலு நீ என்று சொல்லக்கூடிய வகையில் அஜித்தோடு வாலி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த வடகத்திய பெண்ணான நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

இதனை அடுத்து இவர் ஓவர் எக்ஸ்பிரஷன் செய்வதின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததை அடுத்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகா..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் காலில் கட்டிய சலங்கை சும்மா இருக்காது என்று ஒரு சொல்லாடை உள்ளது. அதற்கு ஏற்ப திரைப்படத்தில் நடித்து வந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் திருமணத்திற்கு பிறகு தமிழ் திரை உலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதனை அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜோதிகா தமிழ் திரைப்படங்கள் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்த பின் பாலிவுட்டில் நடிக்கவில்லை.

பாலிவுட்டில் இருந்து விலகினேன்..

இந்நிலையில் பாலிவுட் திரைப்படங்களில் நடிகை ஜோதிகா எதனால் நடிக்காமல் இருந்தால் என்பது பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். அந்த வகையில் இவர் கூறும் போது தன்னுடைய முதல் படம் தோல்வியை தழுவியதை அடுத்து பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் தான் நான் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடிக்க ஆரம்பித்து வெற்றியை சுவைத்தேன் என்று கூறிய விஷயம் பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

பரம ரகசியம் உடைந்தது..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆரம்ப நாட்களில் ஹிந்தி படத்தில் நடித்து அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து ஹிந்தியில் நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ் படங்களில் நடித்த ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ஆரம்பத்தில் நடிக்காத ரகசியத்தை உடைத்து விட்டார்.

இதனால் இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பேச்சானது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version