பாத்தாலே எச்சில் ஊறுது.. மாம்பழம்.. ஜூஸ் ஆகிடுச்சு.. பசியை தூண்டும் நடிகை காவியா அறிவுமணி..!

சினிமாவில் இன்னமும் பிரபலமான நடிகையாக வளர்ந்து வரவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு தகுந்த முயற்சி செய்து வரும் ஒருவராக இருப்பவர் தான் காவியா அறிவுமணி.

பெரும்பாலும் சின்னத்திரை சீரியல் பார்ப்பவர்களுக்கு காவியா அறிவுமணியை தெரிந்து இருக்கும். ஆனால் திரைப்படங்களை மட்டும் பார்க்கும் மக்களுக்கு இவரை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருபவர் நடிகை காவியா அறிவுமணி. அதன் மூலமாக எப்படியாவது வெள்ளித் திரையில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்து வருகிறது.

சீரியலில் துவக்கம்:

2019 ஆம் ஆண்டு தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை துவங்கினார் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலில் முதன்முதலாக இவர் அறிமுகமானார் பாரதிகண்ணம்மா சீரியல் அப்பொழுது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த ஒரு சீரியலாக இருந்தது.

அதிகமான மக்கள் பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதில் வாய்ப்பு கிடைத்ததால் காவியம் மிக எளிதாகவே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக துவங்கி இருந்தார்.

இந்த நிலையில் அடுத்து பாண்டியன் ஸ்டோர்  சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வெளியேறியதால் அதற்கு பதிலாக வேறு நடிகை நடிக்க வைக்க வேண்டி இருந்தது. அப்பொழுது காவியாவையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர்.

திரைப்பட வாய்ப்புகள்:

இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட சீரியல் ஆகும். இந்த இரண்டு சீரியலுமே பிரபலமான சீரியல் என்பதால் அது காவியாவிற்கு எளிதாக வரவேற்பை பெற்று தந்தது.

தொடர்ந்து அதனை வைத்து திரை துறையிலும் வாய்ப்பை பெற துவங்கினார் காவியா. இந்த நிலையில் இயக்குனர் சக்திவேல் இயக்கி பரத் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மிரள் என்கிற திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது.

அந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு காவியாவிற்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து ரிப்பப்பரி என்கிற ஒரு ஹாரர் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் வரவேற்பு பெறவில்லை.

தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடிவரும் காவியா அறிவுமணி மற்ற நடிகைகளை போலவே அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை பழக்கமாக கொண்டவராவார். அந்த வகையில் மஞ்சள் நிறத்தில் தற்சமயம் கையில் மாம்பழ பழச்சாறுடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தான் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version