ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் தெலுங்கு சினிமாவில் அந்த டார்ச்சர்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

நடிகை காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004- ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவருக்கு 2007 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுக நடிகையாக அறிமுகமானார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். தனது பள்ளி படிப்பை மும்பையிலேயே முடித்த இவர் பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை காஜல் அகர்வால்..

தமிழைப் பொறுத்த வரை இவர் 2008:ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடித்து வெளி வந்த பழனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளி-வந்த சரோஜா படத்தில் ஒரு சின்ன கேரக்டரை செய்ததை அடுத்து பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகரான சூரியாவுடன் மாற்றான் படத்திலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் உடனா துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் காஜல் அகர்வால் 2020-ஆம் ஆண்டு கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிவிட்டார்.

குழந்தை பெற்ற பிறகும் தெலுங்கு சினிமாவில் டார்ச்சர்..

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய காஜல் அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது திருமண வாழ்க்கைக்கு பின் சினிமா வாழ்க்கை எப்படி உள்ளது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த காஜல் அகர்வால் திருமணம் முடிந்த உடன் ஹீரோயின்களின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் என் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகும் எனக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை குஷியோடு தெரிவித்த இவர் திருமணத்திற்கு முன்பு பின்பு என இரண்டாகப் பிரித்து சினிமாவைப் பார்த்தால் அதில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை என்று அசால்ட் ஆக சொன்னார்.

ஓபன் ஆக பேசி அதிர்ச்சியை கிளப்பிய காஜல்..

அது மட்டுமில்லாமல் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளின் நிலைமை அப்படி இல்லை.

திருமணம் ஆன நடிகைகளுக்கு அங்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறும் போது தான் திரை உலக்கில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும் என சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் தெலுங்கு சினிமாவில் அந்த மாதிரியான டார்ச்சர் நடக்கிறதா? என்று காஜல் அகர்வால் தெலுங்கு திரைப்படத்தில் திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொன்ன விஷயத்தை ஓபன் ஆக நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து விரைவில் தெலுங்கு திரை உலகிலும் இது போன்ற மாற்றங்கள் கட்டாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version